கருணாநிதி, இளங்கோவன் மீது பாய்ந்தது டெஸ்மா: கைதாக வாய்ப்பு
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தூண்டும் வகையில் பேட்டிகள் கொடுத்ததாகவும், அறிக்கைகள்விடுத்ததாகவும் கூறி திமுக தலைவர் கருணாநதி, காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நில்லகண்ணு ஆகியோர்மீது டெஸ்மா சட்டத்தின் கீழ் தமிழக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.
சமீபத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நடந்தது. இதையடுத்து அவர்கள் மீது எஸ்மா மற்றும்திருத்தப்பட்ட எஸ்மா சட்டமான டெஸ்மா ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, இளங்கோவன், நல்லகண்ணு, வரதராஜன் ஆகியோர் மீது டெஸ்மாசட்டத்தின் 5-வது பிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுத் துறைச் செயலாளர் பிச்சாண்டியின் உத்தரவின் பேரில், குற்றப் பிரிவு போலீஸார் இந்த வழக்கைப் பதிவுசெய்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஊக்குவிக்கும் வகையிலும், தூண்டும் வகையிலும் பேசியதாகவும்,அறிக்கைகள் விட்டதாகவும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையின் நகல்கள் சென்னை கூடுதல் மெட்ரோபாலிடன் விடுறை கால நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டன.
டெஸ்மா சட்டத்தின் 5-வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படுவோருக்கு, 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனைஅல்லது ரூ. 5,000 அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கருணாநிதி உள்ளிட்டவரகளை இந்தச் சட்டத்தின் கீழ் மாநில அரசு கைது செய்யவும் வாய்ப்புள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications