எஸ்மா வழக்கை எதிர்த்து கம்யூ. கட்சிகள் உண்ணாவிரதம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது எஸ்மா சட்டப்படிவழக்குத் தொடரப்பட்டுள்ளதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும்ஆர்ப்பாட்டம் நடத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்செயலாளர் வரதராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
அரசு ஊழியர்களின் போராட்டத்தைத் தூண்டி விட்டதாக கூறி எங்கள் மீதும், திமுக தலைவர்கருணாநிதி, காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மீதும் அதிமுக அரசு எஸ்மா சட்டத்தின் கீழ்பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளையும் கேட்டுக் கொள்ளதிட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.
பெப்சிககு எதிராக தி.க. ஆர்ப்பாட்டம்:
கோக், பெப்சி பானங்களுக்குத் தடை விதிக்கக் கோரி திராவிடர் கழகம் சார்பில் தமிழகம்முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோக், பெப்சி குளிர்பானங்களில் நச்சுப் பொருள்கள் கலந்திருப்பதால் அவற்றிற்குத் தடை விதிக்கபல அமைப்புகளும் கோரி வருகின்றன. இந்தக் கோரிக்கையை முன் வைத்து தி.க. சார்பில் தமிழகம்முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தற்கு கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார்.












Click it and Unblock the Notifications