கெளரவ ரேஷன் கார்டு: இளங்கோவன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாத வருமானம் ரூ. 5,000க்கு மேல் வாங்குபவர்களுக்கு கெளரவ ரேஷன் கார்டு கொடுக்கப்படும், அவர்களுக்குரேஷனில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, நடுத்தர வர்க்க மக்களைகடுமையாக பாதிக்கும் என்று காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கண்டித்துள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் மூப்பனார் மற்றும் தீரர் சத்தியமூர்த்தி ஆகியோரின் பிறந்த நாள் விழா இன்றுகொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன்,

5,000 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்று அறிவித்துள்ளதுசரியல்ல. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

5,000 ரூபாயை வைத்துக் கொண்டு இந்தக் காலத்தில் குடும்பம் நடத்துவது மிகச் சிரமம். இந்த நிலையில்அனைத்துப் பொருட்களையும் வெளி மார்க்கெட்டில் வாங்க வேண்டும் என்றால் அவர்கள் எங்கே போவார்கள்?.

எனவே இந்த கொடுமையான முடிவை முதல்வர் ஜெயலலிதா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கோலார் தங்க வயலில் வேலை பார்த்த 4,000 தமிழ் தொழிலாளர்களுக்கு இலவச அரிசி வழங்கப் போவதாகஜெயலலிதா அறிவித்துள்ளார். இது பாராட்ட வேண்டிய விஷயம்தான்.

அதேசமயம், தமிழக அரசின் திடீர் வேலை நீக்கத்தால் வேலையின்றி பட்டினியில் வாடி வரும் சாலைப்பணியாளர்கள் உள்ளிட்ட 40,000 பேருக்கும் இதேபோல இலவச அரிசியும், பிற உதவிகளையும் ஜெயலலிதாசெய்ய வேண்டும் என்றார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+