பசு வதை தடுப்பு சட்டம்: கருணாநிதி-நாயுடு கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமலாக்கத் திட்டமிட்டுள்ள பசு வதைத் தடுப்புச்சட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியும், ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின்தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இன்று மக்களவையில் பசு வதைத் தடுப்புச் சட்ட மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தமுயன்றது. இதையடுத்து பெரும் அமளி ஏற்பட்டது.

இந்த மசோதாவுக்கு திமுக எம்.பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின்எம்.பிக்கள் இந்த மசோதாவின் நகலைக் கிழித்து எறிந்தனர். இதை எதிர்த்து குரல் கொடுத்த பா.ஜ.க.எம்.பிக்களை நோக்கி அவர்கள் ஆவேசமாக முன்னேறினர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த மத்திய அரசு மசோதா தாக்கலை வாபஸ் பெற்றுக்கொண்டது. இன்னொரு நாளில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசுகூறியுள்ளது.

இந் நிலையில் முரசொலி நாளிதழில் பசு வதை தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குகருணாநிதி அளித்துள்ள பதில்:

பசு வதைத் தடுப்புச் சட்டத்திற்கு கேரளா, வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்தசட்டத்தைக் கொண்டு வந்தால், தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ள 15 லட்சம்தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளது.

அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டியது வரும். எனவே பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக்கொண்டு வராமல் தடுத்து நிறுத்துவதே சாலச் சிறந்தது. மேலும்,இந்த சட்டத்தால் மத நல்லிணக்கம்கெடும் வாய்ப்பும் உள்ளது.

குறிப்பிட்ட சமுதாயத்தினரை மட்டும் மனதில் வைத்து இந்த சட்டத்தைக் கொண்டு வர முயற்சிநடக்கிறது. இது தவறு.

மாதம் ரூ. 5000க்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கு இனிமேல் ரேஷனில் அரிசி உள்ளிட்டபொருட்கள் கொடுக்கப்பட மாட்டாது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உள்ளது.

இப்போது, கடை நிலை ஊழியர் கூட மாதம் ரூ. 5000க்கும் மேல் சம்பாதிக்கிறார். இருப்பினும்அவர்களது வாழ்க்கை தரம் உயர்ந்ததாக இல்லை. எனவே இந்த புதிய உத்தரவால் ஏழை, எளிய,நடுத்தர வர்க்க மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இதற்கிடையே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச்சந்தித்துப் பேசினார்.

அப்போது இந்தச் சட்டத்துக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+