உஷார் நிலையில் போலீசார்: நாளை கருணாநிதி கைதா?
சென்னை:
அரசு ஊழியர்களை போராடத் தூண்டியதாக எஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள திமுகதலைவர் கருணாநிதி நாளை கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் பரவியுள்ளன.
வெள்ளிக்கிழமையில் கைது செய்தால் இரு நாட்களுக்கு அவர் ஜாமீனில் வெளியே வர முடியாது என்பதால்நாளை அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
மாவட்ட எஸ்.பிக்கள், மாவட்ட கலெக்டர்கள், மாநகர கமிஷ்னர்கள் ஆகியோருக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்துவந்துள்ள அவசர உத்தரவில் நாளை உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்மா சட்டத்தின் கீழ் எதிர்க் கட்சியினர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளதை கண்டித்து நாளை மாநிலம் முழுவதும்திமுக, மதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் பஙகேற்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. முதல்முறையாககாங்கிரசுடன் ஒரே அணியாகச் சேர்ந்து போராட்டம் நடத்தப் போகிறது திமுக.
இதற்காகவே உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறும் போலீசாரே, ஒருவேளை கருணாநிதிகைது செய்யப்படலாம் என்றும் கூறுகின்றனர்.
இந்தத் தகவல்களை தனது போலீஸ் தொடர்புகள் மூலம் திமுக வட்டாரமும் நன்றாகவே தெரிந்துவைத்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து திமுகவினர் எதற்கும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவாலயத்தில்இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவுகள் பறந்துள்ளன.
திமுக வழக்கறிஞர்கள் தலைமையுடன் தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்தக் கைதுமுயற்சியை முறியடிக்க மத்திய அரசு மூலமாக நெருக்குதல் தரும் பணியில் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஒரு வார காலமாகவே எந்த நேரத்திலும் கருணாநிதி கைதாகலாம் என அறிவாலயம் எதிர்பார்த்துக்கொண்டுள்ளது. 4 நாட்களுக்கு முன் தஞ்சை, திருச்சியில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களில் பங்கேற்க கருணாநிதிரயிலில் சென்றபோது அவர் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. பின்னர் திருச்சியில் வைத்துகைதானதாகவும் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது..
கருணாநிதிக்கு பா.ஜ.க. எதிர்ப்பு:
இதற்கிடையே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரசுடன் இணைந்து நாளை போராட்டம் நடத்ததிமுக முடிவு செய்திருப்பது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது என அக் கட்சியின் தேசியச் செயலாளர் இல.கணேசன்கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications