6,072 அரசு ஊழியர்களிடம் விசாரணை எப்போது?: நீதிபதிகள் விளக்கம்
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணைநடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள 3 ஓய்வு பெற்றஉயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 6,072 பேர் தவிர மற்ற அனைவருக்கும் மீண்டும்வேலை கொடுக்கப்பட்டு விட்டது.
6,072 பேருடைய வழக்கு குறித்து ஓய்வு பெற்ற 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் சம்பத், தங்கவேலு, மலை சுப்ரமணியம் ஆகியோர்கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி நியமித்தார்.
இந்தக் குழு எப்போது விசாரணை நடத்தும் என்பது தெரியாமல் இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 3நீதிபதிகளும் கூடி ஆலோசனை நடத்தினர்.
விசாரணை நடத்துவதற்காக குமாரசாமி ராஜா சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் 2 பங்களாக்கள்ஒதுக்கப்பட்டன.
இந்த பங்களாக்களை இன்று 3 நீதிபதிகளும் சுற்றிப் பார்த்தனர். பின்னர் 3 பேரும் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து நீதிபதிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
6,072 பேருடைய மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. குமாரசாமி ராஜா சாலையில் உள்ள 2பங்களாக்களில் விசாரணை நடைபெறும். காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை விசாரணை நடக்கும்.விசாரணைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விசாரணைக்கு அழைக்கப்படுவோருக்கு தனித்தனியாக இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர்கள்கூறியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications