356-வது பிரிவுவை நீக்கக் கோரும் ஜெயலலிதாவுக்கு பா.ஜ.க. எதிர்ப்பு
சென்னை:
மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் தரும், 356-வது அரசியல் சட்டப் பிரிவை நீக்கி விடலாம்என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதற்கு தமிழக பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் குமாரவேலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஸ்ரீநகரில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான மன்றக் கூட்டத்தில் முதல்வர்ஜெயலலிதாவின் உரையை நிதியமைச்சர் பொன்னையன் வாசித்தார். அதில், அரசியல் சட்டம் 356-வது பிரிவைநீக்கி விடலாம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் கருத்து பா.ஜ.க.வுக்கு ஏற்புடையது அல்ல. நாட்டின் ஒற்றுமை, அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கமத்திய அரசு வைத்துள்ள பாதுகாப்புக் கவசம்தான் 356-வது பிரிவு. இந்த சட்டப் பிரிவு இருப்பதால்தான்அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடிகிறது.
இந்த சட்டப் பிரிவின் மீது வெறுப்பு எழக் காரணமே காங்கிரஸ் கட்சிதான். கடந்த காலங்களில் காங்கிரஸ்ஆட்சியில் இருந்தபோது, பலமுறை இந்த சட்டப் பிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டப் பிரிவை எந்த மாநில அரசின் மீதும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பயன்படுத்தி விட முடியாது.கர்நாடக முதல்வராக இருந்த எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு இந்த சட்டப் பிரிவை எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்று வழிமுறை வகுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்த விதிமுறைகளின் படிதான் இனி 356வது பிரிவை பயன்படுத்த முடியும். எனவே, அந்தப் பிரிவையேஜெயலலிதா நீக்கக் கோருவது சரியல்ல என்று கூறியுள்ளார் குமாரவேலு.
இதற்கிடையே காஷ்மீரில் நடந்த மாநிலங்களிடை மன்றக் கூட்டத்தில், இந்தப் பிரிவை கடைசி ஆயுதமாகவேபயன்படுத்துவது எனவும், மாநிலங்களை மிரட்டும் வகையில் இதை பயன்படுத்துவதே இல்லை எனவும் மத்தியஅரசுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications