ஸ்பிக் ஊழல்: தனி நீதிமன்றத்தில் சு.சுவாமி சாட்சியம்
சென்னை:
ஸ்பிக் நிறுவன பங்குகளை விற்றது தொடர்பான ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர்டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி இன்று சாட்சியம் அளித்தார்.
அரசிடம் இருந்த ஸ்பிக் நிறுவன பங்குகள் மீண்டும் அந்த நிறுவனத்திடமே விற்கப்பட்டன.
ஆனால், அவற்றை அடிமாட்டு விலைக்கு அரசு விற்றதாகவும், இதனால் ஸ்பிக் நிறுவனத்துக்கு பெரும் லாபமும்தமிழக அரசுக்கு பெரும் நஷ்டமும் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி. முத்தையா செட்டியார் உள்ளிட்டவர்கள் மீதுசுப்பிரமணியம் சுவாமி கடந்த 1998ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 2001ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று சுப்பிரமணியம் சுவாமி தனிநீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளித்தார். பின்னர் இந்த வழக்கை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி ராஜமாணிக்கம்ஒத்திவைத்தார்.
பின்னர் சுவாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்பிக் நிறுவன பங்கு விற்பனை ஊழல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்துள்ள பல்வேறு மனுக்கள் இந்த தனி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை.இதையடுத்து வரும் 27ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்துள்ளார் என்றார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications