எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: வாசன், இளங்கோவன் கடும் மோதல்
சென்னை:
ஜெயலலிதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டிய 2 காங்கிரஸ்எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக ஜி.கே.வாசனுக்கும்,இளங்கோவனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா தஞ்சாவூருக்குச் சென்றபோது அவரை வரவேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாபநாசம் ராம்குமார்,பேராவூரணி திருஞானசம்பந்தம் ஆகியோர் போஸ்டர் அடித்திருந்தனர். அதில், சோனியா காந்தியின் படத்தைசிறிதாகவும், ஜெயலலிதா படத்தை பெரிதாகவும் போட்டிருந்தனர். வாசன் படமும் அதில் இடம் பெற்றிருந்தது.
பாபநாசம் ராம்குமார், பேராவூரணி திருஞானசம்பந்தம்ஆகியோருக்கு இதுதொடர்பாக கட்சித் தலைவர்சோ.பாலகிருஷ்ணனும், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் குமரி அனந்தனும் அனுப்பியுள்ள விளக்கநோட்டீஸில்,
அக்டோபர் 13ம் தேதியன்று நாகையில் நடந்த அரசுவிழாவில் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும்மணிசங்கர் அய்யர் எம்.பி. ஆகியோரை அவமதிக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக பேசியதைத்தொடர்ந்து அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கலந்து கொள்ளக் கூடாதுஎன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதை மீறும் வகையில், தஞ்சையில் நடந்த அரசு விழாவுக்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்றுபோஸ்டர்கள் அடித்துள்ளீர்கள். போஸ்டரில் சோனியா காந்தி படத்தை மிகச் சிறிய அளவிலும், ஜெயலலிதாபடத்தை பிரமாண்டமாகவும் பிரசுரத்துள்ளீர்கள். அத்தோடு விழாவிலும் கலந்து கொண்டுள்ளீர்கள்.
கட்சிக்கும்,கட்சித் தலைமைக்கும் நீங்கள் செய்துள்ள துரோகம் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அரசிடமிருந்தும்,முதல்வடமிருந்தும் லாபத்தை எதிர்பார்த்து இவ்வாறு நடந்து கொண்டுள்ளீர்கள்.
எனவே உங்களது செயல்பாடுகள் குறித்து உடனடியாக கட்சித் தலைமைக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவாரத்திற்குள் இந்த நோட்டீஸுக்குப் பதில் அளிக்காவிட்டால், உங்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்என்று கூறப்பட்டு இருந்தது.
வாசன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் வாசன் தரப்பினர் கோபமடைந்துள்ளனர்.இதற்கு பின்னணியில் இளங்கோவன் இருப்பதாக அவர்கள் கொதித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஜி.கே.வாசனிடம் இதுகுறித்துக்கேட்டபோது, சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் கூட விளக்கம் கேட்காமல்,சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களிடம் நேரில் விளக்கம் கேட்காமல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதுகண்டனத்துக்குரியது. இந்த நடவடிக்கையில் உள்நோக்கம் உள்ளதாகவே கருதத் தோன்றுகிறது என்றார்.
இதற்கு இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், இதில் எந்த உள்நோக்கம் இல்லை.முறைப்படியான நடவடிக்கைதான் இது. சோ.பா.வின் நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்.
இருவரது நடவடிக்கை குறித்து மேலிடத்திலும் புகார் கொடுத்துள்ளோம். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதால்தான்இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சரியான பதில் கொடுக்கவில்லை என்றால்இருவரும் கட்சியை விட்டே தூக்கி எறியப்படுவார்கள்.
ஜெயலலிதாவை ஆதரிக்க விரும்பினால் அதிமுகவுக்குப் போயிவிடலாம். காங்கிரஸ் கட்சியில் அவர்களுக்குஇடமில்லை. இந்தப் பிரச்சினையால் கட்சியில் விரிசல் எதுவும் ஏற்படாது என்றார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications