வட கிழக்குப் பருவ மழை என்னவாயிற்று?
சென்னை:
லேட்டாக தொடங்கினாலும், பயங்கர மழை இருக்கும் என்று கூறப்பட்ட வட கிழக்குப் பருவ மழை காணாமல்போய் விட்டது. தமிழகமெங்கும் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. மக்கள் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வட கிழக்குப் பருவ மழை தமிழகம் முழுவதிலும் தொடங்கியது. ஒரு வார காலம்லேட்டாக தொடங்கினாலும் கூட, தமிழகம் முழுவதிலும் நல்ல மழை இருக்கும் என்று கூறப்பட்டது.
அதற்கேற்றபடி மாநிலம் முழுவதிலும் மழை வெளுத்து வாங்கியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வேகமாகஅதிகரிக்கத் தொடங்கியது. மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும் நீர் இருப்பு கிடுகிடுவென அதிகரித்தது.
ஆனால் கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதிலும் எங்குமே மழை இல்லை. வெயில் கொளுத்துகிறது. கிட்டத்தட்டகோடை கால வெயில் போல கடுமையாக உள்ளது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் கேட்டபோது,வட கிழக்குப் பருவ மழை முடிவடைய இன்னும் 2 மாத காலம் உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு, வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் ஒரிசா நோக்கி நகர்ந்து போன காரணத்தால்தான் வெயில்அடிக்கிறது.
மீண்டும் ஒரு தாழ்வழுத்த மண்டலம் உருவாகும் வாய்ப்புள்ளது. அதன் பிறகு சென்னை உள்பட தமிழகம்முழுவதிலும் கன மழை இருக்கும். மாநிலம் முழுவதிலும் போதுமான அளவுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இன்னும்உள்ளதாக கூறப்பட்டது.
வட கிழக்குப் பருவ மழையை நம்பித்தான் சென்னை மக்கள் குடிநீருக்காக காத்திருக்கிறார்கள். அதேபோல, சம்பாசாகுபடிக்கு வட கிழக்குப் பருவ மழைதான் காவிரி பாசனப் பகுதி விவசாயிகளுக்குக் கை கொடுக்க வேண்டும்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications