தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர அதிமுக தயராகி வருகிறது: பாஜக
கோழிக்கோடு:
அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தேசியக் கூட்டணிக்கு மீண்டும் திரும்பத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனஎன்று பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாதுகாப்புதுறை இணையமைச்சருமான ஓ.ராஜகோபால்கூறினார்.
கிராம அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சாதனைகளை விளக்கிச் சொல்வதற்காக ஏற்பாடுசெய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:
காங்கிரஸ் உள்ளிட்ட முந்தைய அரசுகளின் செயல்பாடுகளோடு ஒப்பிடுகையில், வாஜ்பாய் தலைமையிலானஅரசுதான் நாட்டிற்கு நல்லது செய்வதில் முதன்மையானதாக விளங்குகிறது.
இதைப் புரிந்து கொண்டதால்தான் மம்தகா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் மீண்டும் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இணைந்தது. இப்போது அதிமுகவும் அதற்குத் தன்னை தயார்ப்படுத்தி வருகிறது.
இந்தக் கூட்டணி அரசு நீண்ட நாள் நீடிக்காது என்று கூறியவர்களின் ஆரூடத்தைப் பொய்யாக்கியதோடுமட்டுமல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல துறைகளிலும் நாட்டை வேகமாக முன்னேற்றிக் கொண்டுவருகிறது.
கடன் சுமையைத் தவிர, 47 வருட காங்கிரஸ் ஆட்சியின் சாதனையாக வேறு எதையும் கூறமுடியாத போது, ஐந்துஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆண்டுள்ள வாஜ்பாய் அரசின் சாதனைகள் மிக அதிகமாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போது உள்ள நிலைமை என்னவெனில், எந்த ஒரு கட்சியும் கூட்டணியைவிட்டு விலகத் தயாராக இல்லை. மாறாக வெளியேறிச் சென்ற அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் உள்ளே வரத்தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகின்றன என்றார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications