10, 12ம் வகுப்பு பாடங்களை 9, 11ம் வகுப்புகளில் நடத்தக் கூடாது: அரசு உத்தரவு
சென்னை:
100 சதவீத தேர்ச்சியை அடைவதற்காக 10 மற்றும் 12ம் வகுப்புப் பாடங்களை அதற்கு முந்தைய வகுப்புகளில் பலபள்ளிகள் நடத்தி வருகின்றன. இதற்குத் தடை விதித்து தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக ஒன்பதாம் வகுப்பில் 10ம் வகுப்பு பாடத்தையும், பிளஸ் 1ல் பிளஸ் 2பாடத்தையும் மெட்ரிக் பள்ளிகள் உள்பட பல பள்ளிகள் நடத்துகின்றன. இதையடுத்து அந்தப் பள்ளிகளே ஒருதேர்வையும் நடத்தி அதில் தேர்ச்சி பெறத் தவறினால் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் மாணவர்களை சேர விடாமல்தடுக்கின்றன.
இதைத் தடுக்க புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவில் கூறப்பபட்டுள்ளதாவது:
எஸ்.எஸ்.எல்,ஸி., பிளஸ் 2 பாடங்களை முறையே ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளில் நடத்துவது முற்றிலும் தவறு.இதனால் மாணவர்களின் உடல் , நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது. எனவே அந்தந்த வகுப்புப் பாடங்களைஅந்தந்த வகுப்புகளில் மட்டுமே நடத்தவேண்டும்.
இந்த அரசு உத்தரவை மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதோடு, பள்ளி நிர்வாகிகள் மீதும் கடும்நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புப் பாடங்களை விரைந்து முடித்து விட்டு, அதன் பிறகு எஸ்.எல்.எஸ்.ஸி மற்றும்பிளஸ் 2 பாடங்களைக் கற்பிப்பதும் தவறு. எந்த ஒரு வகுப்பிலும் இறுதியாண்டுத் தேர்வு முடியும் முன் அடுத்தவருடத்திற்கான பாடங்களைக் கற்பிக்கக் கூடாது.
இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!











Click it and Unblock the Notifications