குடிக்கு அடிமையான கணவர்: மகள்களுடன் தாய் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

குடிப்பழக்கத்துக்கு அடிமையானவரின் மனைவியும் 3 மகள்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ளது சின்னகண்டியங்குப்பம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்ததனவேலு, குடிக்கு அடிமையானவர். இதனால் வீட்டில் நிம்மதி இல்லை. மனைவி மல்லிகா, கணவரைத் திருத்தபலவாறும் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை.

இந் நிலையில் தனவேலுவுக்கும், மல்லிகாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தனவேலுஆண்டிமடம் சென்று விட்டார். கணவர் சென்ற பின்னர் மனம் உடைந்த நிலையில்இருந்த மல்லிகா, கணவர்திருந்துவதாகத் தெரியவில்லை. இனிமேல் வாழ்ந்து என்ன பயன் என்று நினைத்து தற்கொலை முடிவை எடுத்தார்.

மகள்கள் முருகவல்லி, ராஜவல்லி, ராஜாத்தி ஆகிய 3 பேருடனும், வீட்டுக்கு அருகே உள்ள முந்திரித் தோப்புக்குச்சென்ற மல்லிகா அங்கு மகள்களுடன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் மருமகள் மற்றும் பேத்திகளைப் பார்க்க வந்த மாமனார் கிருஷ்ணசாமி, நான்கு பேரும் தூக்கில்தொங்குவதைப் பார்த்து அதிர்ந்தார். போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+