200 மண் புழுக்களை விழுங்கி இளைஞர் சாதனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கின்னஸ் சாதனை படைப்பதற்காக 30 விநாடியில் 200 மண்புழுக்களை விழுங்கி சென்னை இளைஞர் சாதனைபடைத்துள்ளார்.

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். வேலையில்லாத பட்டதாரி. மற்றவர்களைக் கவரும்வகையில் ஏதாவது செய்து கொண்டே இருப்பவர். கின்னஸ் சாதனைப் புத்தகத்தைப் படித்த போது, அதில் 30விநாடிகளில் 94 மண் புழுக்களை ஒருவர் விழுங்கி சாதனை படைத்திருப்பது தெரியவந்தது.

இதை முறியடிக்க அவர் உறுதி பூண்டார். பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் கடலூர்சென்ற அவர் அங்கு நடந்த பொருட்காட்சியின்போது, பொதுமக்கள் முன்னிலையில், 30 விநாடிகளில் 175 மண்புழுக்களை சாப்பிட்டு பிரமிக்க வைத்தார்.

இதைத் தொடர்ந்து, நேற்று சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த அவர் அங்கு திரளான பொதுமக்கள்முன்னிலையில், 200 மண் புழுக்களை சாப்பிட்டு அத்தனை பேரையும் ஆச்சயர்யத்தில் மூழ்கடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+