ஓய்வு முகாம்: முதுமலைக்கு யானைகளை கொண்டு செல்ல டி.ஆர். பாலு தடை
சென்னை:
ஓய்வு கொடுப்பதாகக் கூறி தமிழக கோவில் யானைகளை அடித்து, உதைத்து லாரிகளில் ஏற்றி முதுமலைக்குக்கொண்டு செல்லும் தமிழக அரசின் செயல்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. இத் துறையின் அமைச்சர் திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளை முதுமலையில் முகாம் அமைத்து ஒரு மாத காலத்திற்கு ஓய்வு அளிக்கதமிழக அரசு திட்டமிட்டு, தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில் யானைகளை முதுமலைக்குக் கொண்டு சென்றது.
கோவில் யானைகளை லாரிகளில் ஏற்ற முயன்றபோது அவை முரண்டு பிடித்ததால், பல யானைகளை அடித்தும்,தார் குச்சிகளால் குத்தியும், வலுக்கட்டாயமாக ஏற்றி முதுமலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
யானைகளை துன்புறுத்துவதற்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக மத்தியஅரசுக்கும் புகார்கள் அனுப்பப்பட்டன.
இந் நிலையில், யானைகளை முதுமலைக்குக் கொண்டு சென்று ஓய்வு கொடுக்கும் தமிழக அரசின் திட்டத்திற்குமத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. யானைகளை வலுக்கட்டாயமாக லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்லக் கூடாது என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே யானைகள் முதுமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு முகாமும் தொடங்கிவிட்டது. இனியும்மேற்கொண்டு யானைகளை கொண்டு செல்வதை மத்திய அரசின் உத்தரவு தடுக்கும் என்று தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்காக, ஒரே இடத்தில் கோவில் யானைகளைக் கொண்டு வந்து, கஜ பூஜை நடத்தவே இந்தமுகாம் நடத்தப்பட்டு வருவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications