ராஜீவோடு பலியான போலீசுக்கு நினைவிடம்: ஜெ-- இப்போது தான் நினைவு வந்ததா?- கருணாநிதி
சென்னை:
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவருடன் சேர்ந்து பலியான 9 காவலர்களுக்குநினைவிடம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில், காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அவர்பேசுகையில், குற்றம் இல்லாத, அமைதியான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதில் காவலர்களுக்கு மிக முக்கியப்பங்கு உள்ளது. எனவே காவலர்களை சிறப்பிப்பதை எனது முக்கியப் பணியாகவே கருதகிறேன்.
ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, 9 காவலர்களும் தங்களதுஇன்னுயிரை ஈந்தார்கள். எனவே அவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூரில் நினைவிடம் அமைக்க கடந்த 1995ம் ஆண்டில்உத்தரவிட்டேன். ஆனால் எனக்குப் பின்னர் வந்த திமுக ஆட்சி க்காலத்தில் இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
ராஜீவ் காந்திக்கு அமைக்கப்பட்டதைப் போலவே, அவரைக் காக்க தங்களது உயிரைத் தியாகம் செய்த 9காவலர்களுக்கும் ரூ. 5 லட்சம் செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் 206 காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் ஜெயலலிதா.
கருணாநிதி கேள்வி
குண்டுவெடிப்பில் ராஜிவ் காந்தியுடன் சேர்ந்து உயிர் நீத்த போலீசாருக்கு நினைவுச் சின்னம் அமைக்க 12 வருடம்கழித்து இப்போது தான் ஜெயலலிதாவுக்கு ஞாபகம் வந்ததா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்விஎழுப்பியுள்ளார்.
அவரது பேட்டி விவரம்:
1991ம் ஆண்டு நடந்த அந்தக் கொடுமையான நிகழ்ச்சிக்குப் பின் 5 ஆண்டு காலம் ஜெயலலிதா முதல்வராகஇருந்தாரா. அப்போதெல்லாம் வராத காவலர்கள் நினைவுச் சின்னம் அமைக்கும் ஞாபகம் இப்போது ராஜிவ்நினைவுச் சின்னத் திறப்பு விழாவுக்குப் பின் வருவதன் சூட்சுமம் எல்லோருக்கும் புரியத்தான் செய்கிறது.
சில போலீஸ் அதிகாரிகளை மட்டும் ஊக்கப்படுத்தி போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருப்பவருக்குபொதுவில் போலீஸ்காரர்களை இப்படியெல்லாம் ஏமாற்றுகிற தந்திரம் தெரியாதா என்ன?. நல்லவேளை பலியானபோலீசாரின் எண்ணிக்கை 9. அதனால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு (ஜெயலலிதாவின் ராசி எண் 9 என்பதுகுறிப்பிடத்தக்கது).
அரசு ஊழயர்களை நிரந்தரப் பணி நீக்கம் செய்து, அவர்களது குடும்பங்களை கண்ணீரும் கம்பலையுமாகநடுத்தெருவில் நிறுத்தியுள்ள பாவத்திற்கு, இப்போது காவலர்கள் நினைவுச் சின்னம் எழுப்பிவிட்டால் அதுபரிகாரமாகிவிடுமா என்ன?.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications