கொடைக்கானல், கோவையில் இரு காதல் ஜோடிகள் தற்கொலை
கொடைக்கானல் & கோவை:
பெங்களூரைச் சேர்ந்த காதல் ஜோடி கொடைக்கானலிலும், முகவரி தெரியாத ஒரு காதல் ஜோடி கோவையிலும்தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கொடைக்கானல்:
பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் மகேஷ் (30). இவரதுஉறவினர் சப்-இன்ஸ்பெக்டர் நாகலிங்கைய்யா. இவரது மகள் நேத்ரா (20).
நேத்ரா பி.எஸ்சி மூன்றாமாண்டு படித்து வந்தார். நேத்ராவும், மகேஷூம் காதலித்து வந்தனர். ஆனால், காதலுக்குஇரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், கடந்த 10ம் தேதி இருவரும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு மைசூர், ஊட்டி ஆகிய இடங்களுக்குச்சென்று விட்டு, 14ம் தேதி கொடைக்கானல் வந்துள்ளனர். மூஞ்சிக்கல்லில் ஒரு ஓட்டலில் அறை எடுத்துத்தங்கியுள்ளனர். காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு, தற்கொலைப் பாறைக்குச் சென்றனர்.
கார் டிரைவர் ராமதாஸ் என்பவரிடம் தற்கொலைப் பாறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றஇருவரும் சுமார் 5,000 அடி உயரமுள்ள அந்தப் பாறை உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலைசெய்துகொண்டனர். இது குறித்து கார் டிரைவர் ராமதாஸ் கொடைக்கானல் போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் இருவரது உடல்களையும் தேடி வருகின்றனர்.
காதல் ஜோடி தங்கியிருந்த ஓட்டல் அறையைச் சோதனை செய்து பார்த்தபோது, அதில் நேத்ராவின் எக்ஸாம் ஹால்டிக்கெட் இருந்தது. அதன் மூலம் அவரது பெங்களூர் விலாசம் கண்டுபிடிக்கப்பட்டு, இருவரது பெற்றோருக்கும்தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவை:
கோவையிலும் ஒரு இளம் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது.
கோவை புரூக் பாண்ட் ரோட்டை ஒட்டியுள்ள ரயில் பாதையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞரும், 20 வயதுமதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணும் ரயிலில் அடிபட்டு இரண்டு துண்டுகளாகக் கிடந்தனர்.
இருவரின் முகவரியும் தெரியாத நிலையில் இதுவும் காதல் ஜோடியாகவே இருக்கலாம் என்று போலீஸார்சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications