ஜெ. வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராக தயார்: சு. சுவாமி
பெங்களூர்:
பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுவழக்கறிஞராக என்னை நியமிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிற்கு ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பெங்களூரில் நிருபர்களிடம் சுப்பிரமணியம் சாமி கூறியதாவது:
எனது புகாரின் அடிப்படையில்தான் ஜெயலலிதாவின் மீது சொத்து குவிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்தவழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டியது கர்நாடக உயர் நீதிமன்றம்தான். இந்தப் பொறுப்புக்கு என் பெயரை முதல்வர் கிருஷ்ணா பரிந்துரைக்கலாம்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் 5வது பிரிவின் கீழ் அரசு தரப்பு வழக்கறிஞராக என்னை இந்த வழக்கில் நியமிக்கவேண்டும் என்று கிருஷ்ணாவைக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் கர்நாடகத்தைச் சேர்ந்தவன் என்பதால், என்னை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிப்பதில் சிக்கல் இருக்காது.இது குறித்து தலைமை நீதிபதியுடன் அவர் ஆலோசிக்க வேண்டும்.
டிசம்பர் 15க்குள் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் தீர்ப்பு வெளியாகும். அந்த வழக்கில் இருந்து அவர்தப்பிக்கவே முடியாது. அவர் சிறை செல்வது உறுதி என்றார் சுவாமி.
கிருஷ்ணா பேட்டி:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றிய முழுவிவரத்தை நான் படித்த பின்பு, வழக்கை இங்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், வழக்கு விசாரணையின்போது மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாநில அட்வகேட் ஜெனரலுடன்ஆலோசனை செய்ய உள்ளேன் என்றார்.
இந்த நீதிமன்றத்துக்கு தனி நீதிபதி, அரசு வழக்கறிஞரை நியமிப்பது மற்றும் நீதிமன்றத்துக்கு இடம் ஒதுக்குவதுதொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெயினுடன் முத்ல்வர் கிருஷ்ணா நேரில் சந்தித்துஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications