குழப்பம், விரக்தி, மன அழுத்தத்தில் அரசு ஊழியர்கள்!
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் தண்டனைக்குள்ளான அரசு ஊழியர்கள் பெரும் குழப்பத்திலும், மன அழுத்தத்திலும்,விரக்தியிலும் மூழ்கியுள்ளனர். எங்கு சென்று நிவாரணம் தேடுவது என்று தெரியாமல் அத்தனை பேரும் விழித்துக்கொண்டுள்ளனர்.
மூன்று நீதிபதிகள் குழு நடத்திய விசாரணையின் இறுதியில் தலைமைச் செயலகம் மற்றும் சென்னை மாவட்ட அரசுஊழியர்கள் 587 பேர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். 2,217 பேருக்கு ஊதிய உயர்வு ரத்து, பதவிஇறக்கம் ஆகியவை அளிக்கப்பட்டு மீண்டும் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
இதில், 587 பேருக்கு டிஸ்மிஸ் உத்தரவுகள் வழங்கப்பட்டு விட்டன. ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டவர்களும்பணி நியமன உத்தரவு பெற்று பணியில் சேர்ந்து விட்டனர்.
ஆனால் பதவி இறக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இன்னும் நியமன உத்தரவுவழங்கப்படவில்லை. அவர்களுக்கு எந்தப் பதவி கொடுப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பமே இதற்குக் காரணம்.இதனால் அவர்கள் இன்னும் வேலையில் சேர முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர்.
இந் நிலையில் டிஸ்மிஸ் ஆன ஊழியர்கள் தாங்கள் எங்கு சென்று நிவாரணம் தேடுவது என்பது தெரியாமல்குழம்பிப் போயுள்ளனர்.
3 நீதிபதிகள் குழுவினரால் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், நிர்வாக நடுவர் மன்றத்தை அரசு ஊழியர்கள்அணுகலாம். நடுவர் மன்றத்தில் முழுமையான உறுப்பினர்கள் இல்லை என்றால், உயர்நீதிமன்றத்தை அணுகலாம்என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இங்குதான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த வேலை நிறுத்தத்தின்போது, அரசுஊழியர்கள் ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஊழியர் சங்கங்கள் வழக்குதொடர்ந்தன.
அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலானமுதலாவது பெஞ்ச், இந்தப் பிரச்சினையில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது. நடுவர் மன்றத்தில்தான் இதற்குமுறையிட வேண்டும் என்று கூறி மனுக்களை டிஸ்மிஸ் செய்தது.
மேலும், நடுவர் மன்றத்தில் ஒரு உறுப்பினர்தான் இருக்கிறார் என்றாலும் கூட அரசு ஊழியர்களின் வழக்கைநடுவர் மன்றம்தான் விசாரிக்க முடியும் என்றும் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தெரிவித்திருந்தார்.
இதனால் தற்போது நடுவர் மன்றம் செல்வதா அல்லது உயர்நீதிமன்றத்தை அணுகுவதா என்பதில் டிஸ்மிஸ் ஆனஅரசு ஊழியர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஒரே ஒரு உறுப்பினருடன் (நீதிபதி டேவிட் கிறிஸ்டியன்) இயங்கி வரும் நடுவர் மன்றத்திற்கும்ஆயுட்காலம் நீண்ட காலத்திற்கு இல்லை. நடுவர் மன்றத்தை ஒழித்து விடலாம் என்று கடந்த ஜூன் மாதம் தமிழகஅரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்துள்ளது.
இதன் காரணமாகத்தான் நடுவர் மன்றத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாமலேயே உள்ளனர். இந்நிலையில் நடுவர் மன்றம் விரைவில் கலைக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது.
இத்தகைய சூழ்நிலையால் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியர்கள் தவித்துக்கொண்டுள்ளனர். ஊழியர்களின் வேதனையை உணர்ந்துள்ள அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், கொஞ்சம்பொறுத்து இருக்குமாறும், வக்கீல்களுடன் ஆலோசனை நடந்து வருவதாகவும், அது முடிந்த பிறகு வழக்குதொடுப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தங்களது உறுப்பினர்களை சமாதானப்படுத்தி வருகிறார்கள்.
மொத்தத்தில், நிச்சயமற்ற எதிர்காலம், குழப்பமான சூழ்நிலை, அதிகரித்து வரும் மன அழுத்தம் ஆகியவற்றின்காரணமாக டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியர்கள் மற்றும் தண்டனைக்குள்ளான அரசு ஊழியர்கள் அனைவரும்விரக்தியில் புதைந்து போயுள்ளனர் என்பதுதான் சோகமான உண்மை.












Click it and Unblock the Notifications