மாடி ரயில்: அதிகாரிகள் மீது ஏ.கே.மூர்த்தி பாய்ச்சல்
சென்னை:
சென்னை மயிலாப்பூர்-வேளச்சேரி வரையிலான மாடி ரயில் திட்டப் பணிகள் கடந்த பல மாதங்களாக, எந்தவிதமுன்னேற்றம் இல்லாத நிலையில் இருப்பது குறித்து ரயில்வே அதிகாரிகள், காண்டிராக்டர்களை ரயில்வே இணைஅமைச்சர் ஏ.கே.மூர்த்தி கடுமையாகச் சாடினார்.
அமைச்சர் மூர்த்தி, நேற்று திடீரென்று மாடி ரயில் திட்டப் பணிகளை ஆய்வு செய்யச் சென்றார். அமைச்சரைஎதிர்பார்க்காத அதிகாரிகள், விரைந்து சென்று திட்டப் பணிகள் குறித்து விளக்கினர்.
கடந்த பல மாதங்களுக்கு முன்பு வந்து பார்த்தபோது இருந்த நிலையே தற்போதும் இருப்பதாக அவர்களிடம்கடிந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி, இதற்கு யார் காரணம் என்று கேட்டார். ஒப்பந்தகாரர்கள் தாமதம் செய்வதாகஅதிகாரிகள் கூறவே, ஒப்பந்தகாரர்களையும் கடுமையாக விளாசினார் அமைச்சர்.
காரணம் இல்லாமல் பணிகளில் தாமதம் செய்யும் ஒப்பந்தகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும்அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர் வேளச்சேரி அருகே அமைக்கப்பட்டு வரும் ரயில் பாதை, மண்ணில் புதைந்து வருவது குறித்தும்அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் அமைச்சர். அதுதொடர்பான மண் ஆய்வுப் பணிகளை விரைவில் முடித்துதிட்டத்தை விரைவுபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications