தலைமைச் செயலக ஊழியர்களுக்கு புது கட்டுப்பாடுகள்!
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் புதியகட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் ஆகி 3 நீதிபதிகள் குழுவினரால் டிஸ்மிஸ் நடவடிக்கையிலிருந்துவிடுவிக்கப்பட்ட 2000க்கும் மேற்பட்ட தலைமைச் செயலக ஊழியர்கள் சமீபத்தில்தான் மீண்டும் பணியில்சேர்ந்துள்ளனர். இந் நிலையில், தலைமைச் செயலக ஊழியர்களுக்கு தமிழக அரசு சில புதிய கட்டுப்பாடுகளைவிதித்துள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் விடுத்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தலைமைச் செயலக ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும்.இடையில் மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை விடப்படும்.
காலை வருகைப்பதிவேட்டில் ஊழியர்கள் கையெழுத்திட்டு முடித்தவுடன் 10.15 மணிக்கு வருகைப் பதிவேடுதுணைச் செயலாளர் அல்லது இணைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். மாலையில் வேலை முடிந்துசெல்லும்போது மீண்டும் ஒரு முறை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டே வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
ஒரு மாதத்தில், தொடர்ந்து 3 நாளைக்கு மேல் தாமதமாக வரும் ஊழியர்கள் தங்களது ஒரு நாள் விடுப்பை இழக்கநேரிடும்.
ஊழியர்கள் பணி நேரத்தின்போது என்ன செய்கிறார்கள் என்பது தீவிரமாக கண்காணிக்கப்படும். பணிநேரத்தின்போது என்ன செய்கிறார்கள் என்பதைக் குறிப்பேட்டில் குறித்து வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுப்பு தேவையென்றால் முன் கூட்டியே துறை உயர் அதிகாரிகளிடம் விண்ணப்பம் மூலம் விண்ணப்பித்துஅனுமதி கிடைத்த பிறகே விடுமுறை எடுக்க வேண்டும். தொலைபேசி மூலமாக விடுப்புக்கு விண்ணப்பிக்கக்கூடாது. மருத்து விடுப்புக்கு இந்த விதிமுறை சேராது.
இந்தப் புதிய கட்டுப்பாடுகள், தலைமைச் செயலக ஊழியர்கள் மீது அரசு இன்னும் கோபத்துடன் உள்ளதையேக்காட்டுவதாக ஊழியர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications