ராஜகோபால் வழக்கு: அரசு தரப்பு சாட்சியம் "பல்டி"!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபாலுக்கு எதிரான வழக்கில், அவருக்கு எதிராக சாட்சியம் சொன்னதிருச்செந்தூர் கோவில் தேவஸ்தான குடியிருப்பு மேற்பார்வையாளர் போலீஸ் மிரட்டியதால் அப்படி சாட்சியம்சொன்னதாக கூறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதில் சாட்சியங்கள் விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

அரசுத் தரப்பில் திருச்செந்தூர் முருகன் கோவில் தேவஸ்தான குடியிருப்பு மேற்பார்வையாளர் ராஜா பகவான்சிங்என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, காவல்துறையினர் மிரட்டலால் தான் பொய் சாட்சியம்சொல்ல வேண்டியதாகி விட்டதாக தெரிவித்ததால் நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அவர் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேளச்சேரி காவல் நிலைய அதிகாரிகள் சிலர்திருச்செந்தூர் வந்து ராஜகோபால் பெயரில் பொய்யான ரசீதுகள் தயாரிக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டனர்.நான் அதற்கு மறுத்து விட்டேன்.

பின்னர், ராஜகோபாலின் ஊழியர்கள் சிலரது பெயரைச் சொல்லி அந்தப் பெயர்களில் போலி ரசீது தயாரிக்கக்கூறினார்கள். அதற்கும் நான் மறுத்து விட்டேன். இதையடுத்து காவல்துறையினர் என்னை மிரட்டத்தொடங்கினார்கள். கைது செய்து சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டினார்கள்.

இது தொடர்பாக எனது உயர் அதிகாரிகளிடம் எழுத்துப் பூர்வமாக புகாராக தெரிவித்தேன் என்றார்.

அவரிடம் தேவஸ்தான குடியிருப்பு வருகைப் பதிவேட்டைக் காட்டிய அரசு வக்கீல் இது கோவில்தேவஸ்தானத்திற்கு உரியதுதானா என்று கேட்டபோது, ஆமாம் என்று தெரிவித்தார் ராஜா பகவான்சிங்.

குறி பார்க்கும் பெண்ணின் சாட்சியம்:

இதேபோல, ஜீவஜோதியை அழைத்துச் சென்று ராஜகோபால் குறி பார்த்த பெண் என்று கூறப்பட்ட நெல்லைமாவட்டம் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த குறி பார்க்கும் பெண் செல்லம்மாள் சாட்சியம் அளிக்கையில்ராஜகோபால் யார் என்றே தெரியாது என்று தெரிவித்தார்.

அவர் கூறுகையில், என்னைத் தேடி வருபவர்களுக்கு குறி சொல்வேன். என்னைத் தேடி ஏராளமான பேர்வருகிறார்கள், போகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பும் இதேபோல 2 பெண்கள் உள்பட 5 பேர்வந்தார்கள்.

அவர்கள் யார் என்பது இப்போது நினைவில்லை. (அப்போது ராஜகோபால் உள்ளிட்டவர்களை காட்டிஇவர்கள்தான் அவர்களா என்று அரசு வக்கீல் கேட்டார்). அவர்களை நன்கு பார்த்த செல்லம்மாள் இவர்கள்கிடையாது என்று கூறி விட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+