தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக தேசிய அளவில் பிப்ரவரி 11ல் ஸ்டிரைக்!
சென்னை:
வேலைநிறுத்தம் செய்வதை உரிமையாக்கக் கோரி பிப்ரவரி 11ம் தேதி அகில இந்திய அளவில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மாநில அரசு ஊழியர்களும், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர்.
இது தொடர்பாக அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன கெளரவ தலைவர் எம்.ஆர்.அப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனவரி 8ம் தேதி சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு வேலைநிறுத்த அறிவுப்பு நோட்டீஸ் வழங்கப்படும்.
தமிழகத்தில் ஸ்ரீதரன் தலைமையிலான தமிழக அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கிறது. அரசு அலுவலகங்களில் ஆயத்த கூட்டங்களை அந்த சங்கம் மேற்கொண்டு வருகிறது.
வேலைநிறுத்தம் செய்வது எங்களது பிறப்புரிமை. அரசு ஊழியர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ளனர். எந்த கோர்ட் உத்தரவாலும் எங்களது வேலைநிறுத்த உரிமையைப் பறிக்க முடியாது.
தமிழக அரசின் சமீபத்திய டிஸ்மிஸ் நடவடிக்கைகளால் அரசு ஊழியர்கள் மத்தியில் பீதி நிலவினாலும் கூட பல ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications