கட்சி துரோகிகளுக்கு அதிமுகவில் பதவி கிடையாது: ஜெயலலிதா ஆவேசம்
சென்னை:
1996ம் ஆண்டு தேர்தலில் அதிமுக பெற்ற படுதோல்விக்குப் பிறகு கட்சியை விட்டு வெளியேறி பின்னர்மன்னிக்கப்பட்டு கட்சியில் சேர்க்கப்பட்டவர்களுக்கு கட்சியில் எந்தப் பதவியும் கிடையாது என்று முதல்வரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கண்டிப்புடன் கூறியுள்ளார்.
சென்னை அருகே கொளப்பாக்கம் என்ற இடத்தில், அதிமுக நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தி வருகிறார்ஜெயலலிதா. அதோடு நிர்வாகிகள் தேர்வையும் அவர் நடத்துகிறார்.
இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடந்தநேர்காணலின்போது, கட்சியின் நிர்வாகிகள் தேர்வுக்குப் போட்டியிட்ட பலர், கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள்என்று தெரிய வந்தது கண்டு அதிர்ந்தேன்.
கடந்த 1996ம் ஆண்டு கட்சி பெற்ற தோல்விக்குப் பிறகு இவர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். அதற்குப்பிறகு 1998ம் ஆண்டு லோக் சபா தேர்தலில் கட்சி பெற்ற அமோக வெற்றி மற்றும் 2001ல் நடந்த சட்டசபைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு கட்சியிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டு மீண்டும் கட்சியில்சேர்க்கப்பட்டவர்கள்இவர்கள்.
தங்களது சொந்த லாபத்திற்காகவே கட்சிப் பதவிகளை இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். தொடர்ந்தும்சுய லாபத்தையே மனதில் கொண்டு கட்சியைத் தவறாகப் பயன்படுத்த திட்டமிட்டிருந்தனர்.
கட்சிக்கு 1996ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியின்போது எனக்கும், கட்சிக்கும் துணையாக இருந்தவர்களுக்குமட்டுமே பதவி கொடுக்கப்படும். அவர்கள் மட்டுமே கட்சி தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications