பாக். ஜலசந்தியில் பாலம் அமைத்தால் உறவு வலுப்படும்: இலங்கை அமைச்சர்
ராமநாதபுரம்
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாக் ஜலசந்தியில் கடலில் பாலம் கட்டினால், இரு நாடுகளுக்கும்இடையிலான உறவு மேலும் வலுப்படும் என்று இலங்கை சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சர் ருக்மன்சேனநாயகே கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின்பல்வேறு பகுதி முகாம்களில் வசித்து வரும் 1.5 லட்சம் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கே அழைத்துக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
தாயகத்தில் இழந்த சொத்துக்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை மீண்டும் அகதிகள் பெற இலங்கை அரசு முழுஉதவிகளைச் செய்யும். அவர்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைய நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளினால், முஸ்லீம்களுக்கு ஆபத்து உள்ளதாக கூறப்படுவது தவறானதகவல் என்றார் அவர்.
பின்னர் ராமேஸ்வரம் சென்ற அமைச்சர் அங்கு ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். பின்னர்தனுஷ்கோடிக்கும் சென்று பார்வையிட்டார்.
கடந்த சில நாட்களில் இலங்கையைச் சேர்ந்த கியல்லா, தியாகராஜா பரமேஸ்வரன், சேனநாயகே உள்ளிட்டஅமைச்சர்கள் தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications