பா.ம.கவும் எங்கள் கூட்டணிக்கு வருகிறது: கருணாநிதி
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை எங்களது அணிக்கு அழைத்துள்ளேன். வருவதாக அவரும்உறுதியளித்துள்ளார். எப்போது வருவார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதிதெரிவித்துள்ளார்.
திமுகவைத் தொடர்ந்து மதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மத்திய அமைச்சரவையிலிருந்துவிலகியுள்ளது. இதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ம.க. சார்பில் சென்னையில் நடத்தப்பட்டபொங்கு தமிழ் பன்னிசைப் பெருவிழா நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் நான் ராமதாஸுடன் தொலைபேசியில்பேசினேன். அப்போது திமுக தலைமையிலான அணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் எப்போது எங்களது அணிக்கு பா.ம.க. வரும் என்பது தெரியாது.
திமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை.ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் என்னுடன்தொலைபேசியில் பேசினார். நேரில் வருவதாகவும் கூறியுள்ளார்.
கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்போம். ஆனால் ஜாதிக்கட்சிகளுக்கு நிச்சயம் இடம் கிடையாது. கடந்த தேர்தலைப் போல ஜாதிக் கட்சிகளை அரவணைக்க மாட்டோம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீனில் விடுதலையாகி வெளியே வர வேண்டும். அதில் ஒன்றும் தவறுஇல்லை. அவர் மீது பாய்ந்துள்ளது பொய்யான வழக்குதான். ஜாமீனில் வெளியே வந்து, சட்டப்பட்டி பொய்வழக்கை சந்தித்து அதில் வெற்றி காண வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறி விட்டதால், வைகோ விடுதலைக்கு மத்திய அரசுஉதவாது என்று நான் கருதவில்லை. வாஜ்பாய் அந்தளவுக்கு குறுகிய மனம் படைத்தவராக இருக்க மாட்டார் என்றுகருதுகிறேன். மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு செயல்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications