திமுகவின் விருதுநகர் மாநாட்டை குலைக்க ஜெ. சதி: ஸ்டாலின் புகார்
விருதுநகர்:
விருதுநகரில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள திமுக பிராந்திய மாநாட்டைக் குலைத்து, இடையூறு செய்ய ஜெயலலிதா அரசு சதிசெய்வதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகரில் மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை திமுக தென் பிராந்திய மாநாடு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த மாநாடு நடைபெறுவதால் அந்த சமயத்தில், திமுகவின் தேர்தல் அறிக்கையையும்,வேட்பாளர்கள் பட்டியலையும் திமுக தலைமை வெளியிடும் என்று தெரிகிறது.
இதையடுத்து விருதுநகர் மாநாடு திமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் மாநாட்டுஏற்பாடுகளைப் பார்வையிட மு.க.ஸ்டாலின் விருதுநகர் வந்தார். மாநாடு நடைபெறவுள்ள இடத்தைப் பார்வையிட்ட பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மாநாடு நடைபெறாமல் தடுக்கும் முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது. ஆனால் அதை மீறி மாநாடு திட்டமிட்டபடி வெற்றிகரமாகநடக்கும். விருதுநகர் மாநாட்டிற்கு 5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ற வகையில் விரிவானஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதிமுகவை விட திமுகதான், பா.ஜ.க.அரசுக்கு பெரும் தொந்தரவுகள் கொடுத்ததாக பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன்கூறியுள்ளார். அதற்கு மாநாட்டின்போது திமுக தலைவர் கருணாநிதி உரிய பதிலை அளிப்பார் என்றார் ஸ்டாலின்.
மாநாடு நடைபெறும் இடத்திற்கு முரசொலி மாறன் நகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வழக்கமாக அண்ணா நகர் என்று திமுகமாநாடு நடக்கும் இடங்களுக்கு பெயர் சூட்டப்படும். இம்முறை முரசொலி மாறன் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications