இடங்கள் பகிர்வு: கூட்டணி கட்சிகளுடன் பேச திமுகவில் 6 பேர் குழு
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து, அக்கட்சித் தலைவர்களுடன் பேச 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான இக் குழுவில் கருணாநிதியோ, அன்பழகனோ இடம்பெறவில்லை.
துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்களும் கட்சியின் மூத்த தலைவர்களுமான கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம்ஆகியோர் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இத் தகவல் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுளளது.
இந் நிலையில் வரும் 19ம் தேதி மாலை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சியின் உயர் மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டமும், அடுத்த நாள் காலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அன்பழகன்அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக்
திமுக கூட்டணியில் சேர அகில இந்திய பார்வர்ட் பிளாக் வல்லரசு பிரிவு முடிவு செய்துள்ளது.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் வல்லரசு பிரிவின் செயற்குழுக் கூட்டம் மதுரை மாவட்டம்உசிலம்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் கட்சித் தலைவரும், வல்லரசுவின் மகனுமான கதிரவன்செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
விரைவில் கருணாநிதியை சந்தித்து எங்களது ஆதரவைத் தெரிவிப்போம் என்றார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications