மக்களவை தேர்தல் சவாலானது: புதிய தலைமை தேர்தல் ஆணையர்
சென்னை:
மக்களவைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிப்பது சவாலான விஷயம் என்று புதியதலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நேற்று கிருஷ்ணமூர்த்தி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில்உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் குவிந்தனர்.
செய்தியாளர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி பின்னர் பேசுகையில், நாடாளுமன்றம்கலைக்கப்பட்ட உடனேயே தேர்தல் தேதிகளை அறிவிப்போம். இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுக்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தல் மார்ச்சில் நடக்கப் போகிறது, ஏப்ரலில் நடக்கப் போகிறது என்று பத்திரிக்கைகளும்,அரசியல் கட்சிகளும்தான் கூறி வருகின்றன. அரசுதான் நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து முடிவெடுக்கவேண்டும். அதன் பிறகுதான் தேர்தல் தேதியை அறிவிக்க முடியும்.
தேர்தலுக்கான அடிப்படை கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து உரிய துறை அதிகாரிகளுடன் கலந்துபேசி அதன் பின்னரே தேதியை அறிவிக்க முடியும். இருப்பினும் இவற்றை விரைவாக முடித்து விட்டு தேதியைஅறிவிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
மக்களவைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிப்பது மிகவும் சவாலானது. அதைச் சந்திக்கதேர்தல் ஆணையம் தயாராகவே உள்ளது என்றார் கிருஷ்ணமூர்த்தி.
63 வயதாகும் கிருஷ்ணமூர்த்தி, ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆவார். இவர் திருநெல்வேலி அருகே உள்ள தருவை என்றகிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 2000மாவது ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந்தோனேசிய அரசால், அந் நாட்டு தேர்தல் நடைமுறைகளை சீரமைப்பது குறித்து நியமிக்கப்பட்ட சர்வதேசகுழுவில் கிருஷ்ணமூர்த்தியும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2005ம் ஆண்டு வரைகிருஷ்ணமூர்த்தி தலைமை தேர்தல் ஆணையராக இருப்பார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications