நான் தேச விரோதியா?: பொடா நீதிமன்றத்தில் வைகோ ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நான் என்ன தேசவிரோதியா என்று பொடா நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகக்கேட்டார்.

மதுரை திருமங்கலத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறிவைகோ உள்ளிட்ட 9 பேர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 8 பேர் கடந்த வாரம்ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இத்தனை நாட்களாக ஜாமீன் கோராமல் இருந்த வைகோ திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரின்கோரிக்கையை ஏற்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. அப்போது அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் பதில் மனுஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய வைகோவை ஜாமீனில் விடக்கூடாது என்று அவர் கூறினார்.

இதையடுத்து வைகோ தானே தனக்காக நீதிமன்றத்தில் வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:

திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பேசிய பேச்சின் ஒரு பகுதியை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. ஒட்டுமொத்த பேச்சையும் பரிசீலிக்க வேண்டும்.

அந்தப் பொதுக்கூட்டத்தில் நான் பல நல்ல விஷயங்களையும் பேசினேன். சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்டதமிழகத்திற்கு நலன் விளைவிக்கும் பல விஷயங்களையும் பேசினேன். அதையெல்லாம் காவல்துறை விட்டுவிட்டு, என் பேச்சின் இடையே இலங்கைத் தமிழர்களின் நலன் குறித்துப் பேசியதை மட்டும் வைத்து பொடாசட்டத்தை பிரயோகித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நான் கூட்டத்தில் பேசவில்லை. இலங்கைத் தமிழர்களுக்காகப் பேசினேன்.அதற்காக என்னை தேச விரோதி போல சித்தரிப்பதா? நாட்டுக்கு எதிராக நான் ஏதாவது பேசினேனா?

என் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் அமெரிக்காவில் இருந்த நான் உடனடியாகசென்னைக்குத் திரும்பினேன். என் மீதான வழக்கை சந்திக்கப் பயந்து தலைமறைவாகி ஓடவில்லை. என் மீது தவறுஇல்லை என்பதால்தான் நான் வழக்குப் போட்டவுடன் சென்னைக்குத் திரும்பினேன் என்றார் வைகோ.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயக்குமார், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர்என்.ஆர்.சந்திரன் ஆஜராகி வாதாட உள்ளதாகவும், அவரால் நாளைக்குத்தான் ஆஜராக முடியும் என்றும்தெரிவித்தார்.

இதையடுத்து விசாரணை நாளையும் தொடரும் என்று நீதிபதி ராஜேந்திரன் அறிவித்தார். விசாரணைக்குப் பின்னர்வைகோ மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக வழக்கறிஞர்களின் வாதம் முடிந்த பிறகு இந்த மனு மீது இன்று மாலைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.

தனக்காக தானே வாதாடுவதற்காக பொடா நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர்களுடன் சுமார் 2 மணி நேரம்வைகோ ஆலோசனை நடத்தினார்.

பொடா ஆய்வுக் குழு அதிகாரம்: 23ம் தேதி தீர்ப்பு

இந் நிலையில் வைகோ, நக்கீரன் கோபால் ஆகியோர் மீதான பொடா வழக்குகளை விசாரிக்க பொடா மறுஆய்வுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளதா என்பது பற்றிய தமிழக அரசு எழுப்பியுள்ள கேள்விக்கு, நாளை மறுநாள் தீர்ப்புஅளிக்கப் போவதாக அக் குழுவின் தலைவர் நீதிபதி சஹாரியா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விசாரிக்க ஆய்வுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்று தமிழகஅரசு ஆட்சேபணை தெரிவித்திருந்தது. இதற்கு மத்திய அரசின் கருத்தை ஆய்வுக் குழு கேட்டிருந்தது.

இதனையடுத்து மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரம் பொடா மறுஆய்வுக் குழுவுக்கு உண்டு என்று கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில் குழுவுக்கு உள்ள அதிகாரம் பற்றிய தீர்ப்பை 23ம் தேதி (நாளை மறுநாள்) வழங்குவதாக நீதிபதிசஹார்யா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+