பிப். 1க்குள் தொகுதிப் பங்கீடு முடிந்துவிடும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உள்பட கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்களின்எண்ணிக்கை வரும் 31ம் தேதிக்குள் அறிவிக்கப்பட்டுவிடும். பிப்ரவரி 1ம் தேதி போட்டியிடும் தொகுதிகள்விவரம் தெரிய வரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளகட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வருகிற 31ம்தேதிக்குள் இந்தப் பணி முடிந்து விடும்.

பிப்ரவரி 1ம் தேதி யார், யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள், யாருக்கு எந்த தொகுதிகள் என்றவிவரம் தெரிய வரும். விருதுநகரில் நடைபெறவுள்ள மாநாட்டின்போது திமுக வேட்பாளர்களின் பெயர்களைஅறிவிக்கலாம் என்றுள்ளோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு போதிய அளவுக்கு மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்பதே உண்மை.ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றார்கள். அதைச் செய்யவில்லை.அயோத்தி திட்டத்தை ஒதுக்கி வைப்போம் என்றார்கள். ஆனால், பா.ஜ.கவினரே அவ்வப்போது அந்தவிவகாரத்தைக் கிளப்பினார்கள். செயல் திட்டத்தில் சொல்லாததை எல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள் என்றார்கருணாநிதி.

திருமாவளவன் தனித்து போட்டியிட அறிவித்துள்ளாரே என்று கேட்டதற்கு, நோ கமெண்ட்ஸ் என கருணாநிதிபதிலளித்தார். அவரை கன்வின்ஸ் செய்வீர்களா என்று கேட்டபோது,

எதற்கு கன்வின்ஸ் செய்ய வேண்டும். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது புதிய தமிழகம் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் ஆகியோருக்கு மொத்தமாக 18 தொகுதிகளைக் கொடுத்தோம். ஆனால் ஒரு இடம் தவிர வேறெந்தத்தொகுதியிலும் அவர்கள் ஜெயிக்கவில்லை. இப்போது இருவருமே பிரிந்து நின்று கொண்டு ஒருவரை ஒருவர்எதிர்க்கிறார்கள்.

எனவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு இடம் அளிக்க இயலவில்லை. இருப்பினும் வரும்சட்டசபைத் தேர்தலின்போது அவர்களையும் சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்ய தயாராகவே இருந்தோம்என்றார்.

தலித்களுக்கு முக்கியத்துவம் தருவீர்களா என்று கேட்டபோது, அருகில் இருந்த முன்னாள் திமுக மத்திய அமைச்சர்ராஜாவைக் காட்டிய கருணாநிதி, இவரும் தலித் தான். இவர் என்ன முதலியாரா? செட்டியாரா. திமுக எப்போதும்ஒடுக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்கும் என்றார்.

பாண்டிச்சேரியை பா.ம.கவுக்கு ஒதுக்கியதால் காங்கிரஸ் கோபத்தில் இருக்கிறதே என்று கேட்டபோது,பா.ம.கவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கியது மாதிரி காங்கிரசுக்கும் ஒதுக்கலாம் என பா.ம.கவே கூறியிருக்கிறது.அவர்களுக்கு சட்டசபையில் 14 வாக்குகள் உள்ளன. அடுத்த மாதம் ராஜ்யசபா தேர்தல் நடக்கும்போது அந்தஎம்.பி. சீட்டை காங்கிரஸ் வெல்லும் வகையில் பா.ம.க. வாக்களிக்கலாம். அதே போல திமுக எம்.எல்.ஏக்கள்வாக்களித்து பா.ம.க. நிறுத்தும் வேட்பாளரை எம்.பியாக்குவோம்.

ஆனால், அதிலும் காங்கிரசும் பா.ம.கவும் சண்டை போட்டால் நான் பொறுப்பாக முடியாது. இப்போதுபாண்டிச்சேரியை வைத்து காங்கிரசில் நடந்து வரும் சண்டைக்கும் நான் பொறுப்பல்ல என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+