சென்னை, மதுரையில் திடீர் மழை; மகிழ்ச்சியில் மக்கள்!
சென்னை:
சென்னை மற்றும் மதுரையில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.
மார்கழி மாதம் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் பனி நின்று, வெயில் ஆரம்பித்து விட்டது. குறிப்பாகசென்னை, மதுரை, திருச்சி போன்ற ஊர்களில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது.
இந் நிலையில், சென்னை மற்றும் மதுரையில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்தது. மதுரையில் சுமார் ஒருமணி நேரம் மட்டுமே பெய்தது. ஆனால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்குநல்ல மழை பெய்தது.
குடிக்கக் கூட தண்ணீரின்றி வாடிக் கொண்டுள்ள சென்னை மக்களுக்கு இந்த திடீர் கன மழை பெரும் மகிழ்ச்சியைக்கொடுத்தது. இந்த கன மழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பில் பெரிய அளவு மாற்றம்ஏற்படாது என்றும், வெப்பத்தைக் குறைக்கவே இது உதவும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
இந்த திடீர் மழைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இருப்பினும் புயல் சின்னம் எதுவும் வங்கக் கடலில்தோன்றவில்லை என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
மதுரை தவிர ஒரு சில தென் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications