மதிமுக, கம்யூ. தொகுதிகள் அறிவிப்பு
சென்னை:
மதிமுகவுக்கு திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு நேற்றுதொகுதிப் பங்கீடு முடிவடைந்தது. இதில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் ஆகும்.இதில் சிவகாசியில் வைகோவும், வந்தவாசியில் செஞ்சி ராமச்சந்திரனும், திருச்சியில் எல்.கணேசனும்,பொள்ளாச்சியில் கண்ணப்பனும் போட்டியிடக் கூடும்.
மதிமுக கடந்த முறை வென்ற திண்டிவனம், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகள் இந்த முறை பா.ம.கவுக்குக்கொடுக்கப்பட்டு விட்டன.
இதேபோல மதுரை மற்றும் நாகர்கோவில் ஆகிய தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குஒதுக்கப்பட்டுள்ளது. கோவை தொகுதிக்குப் பதில் நாகர்கோவில் கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை தொகுதியில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மோகன் எம்.பி. ஆக உள்ளார். வருகிறதேர்தலில் மாநில செயலாளர் வரதராஜன் மதுரையிலிருந்து போட்டியிடக் கூடும் என்கிறார்கள்.
நாகர்கோவில் தொகுதியில் 2வது முறையாக போட்டியிடவுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். கடைசியாக 1971ம்ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எம்.அலி என்பவர் காமராஜரை எதிர்த்துப் போட்டியிட்டுத்தோற்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயம்புத்தூர் மற்றும் தென்காசி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணு ஆகியோர் தனித்தனியாக திமுக தலைவர்கருணாநிதியை சந்தித்து தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுவரை ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் 25 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.காங்கிரஸூக்கு 10, பா.ம.கவுக்கு 6, மதிமுகவுக்கு 4, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2, இந்திய முஸ்லீம் லீக்கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்றுதெரிகிறது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications