மதிமுகவில் பூசல்: எல்.கணேசன் மீது வைகோ அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக மதிமுகவுக்குள் மோதல் வெடித்துள்ளது.

கடந்த வாரம் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்கிய திமுகவுடன் உடன்பாட்டில் தனி ஆளாய் வந்து கையெழுத்திட்டார்மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர்களான செஞ்சி ராமச்சந்திரனும் கண்ணப்பனும்வரவில்லை.

அப்போதே மதிமுகவில் நெருடல் இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. வெறும் 4 தொகுதிகளை மட்டுமே தந்து தங்களைதிமுக ஏமாற்றிவிட்டதாக மதிமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் கருதுகின்றனர்.

மேலும் திருச்செங்கோட்டையும், கவுண்டர்கள் இன மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளையும் தராததால் கண்ணப்பன் மீண்டும்போட்டியிட வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டதாகவும் திமுக மீது கோபம் நிலவுகிறது.

இந் நிலையில் மதிமுக கட்சிப் பத்திரிக்கையான சங்கொலி இதழில் தொண்டர்களுக்கு வைகோ ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன்விவரம்:

திமுக மீது தொகுதிப் பங்கீட்டில் நமக்கு வருத்தம் என்று சில பத்திரிக்கைகள் வேண்டுமென்றே திரித்து செய்திகளை வெளியிட்டுவருகின்றன. இது வருத்தத்தை அளிக்கிறது. இந்த செய்திகளில் கொஞ்சமும் உண்மை இல்லை.

உண்மையில், என்னை சிறையில் சந்தித்த தேர்தல் குழுவினரிடம், பழனி, கோவை, பொள்ளாச்சி, வந்தவாசி, சிவகாசி, தஞ்சாவூர்,திருச்சி ஆகியவற்றை மதிமுகவுக்கு ஒதுக்குமாறு திமுகவிடம் கேட்குமாறு கூறியிருந்தேன்.

திருச்செங்கோடு தொகுதியில் மீண்டும் போட்டியிட கண்ணப்பன் விரும்பவில்லை. மாறாக கோவையிலிருந்து போட்டியிட அவர்விருப்பம் தெவித்திருந்தார். அதேபோல, தஞ்சை தொகுதியில் மீண்டும் போட்டியிட எல்.கணேசன் விரும்பவில்லை.

திண்டிவனம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட செஞ்சி ராமச்சந்திரன் வந்தவாசியில் போட்டியிட விரும்பியதால் அந்தத்தொகுதியை கேட்டோம். இந் நிலையில், ஜனவரி 30ம் தேதி ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் என்னை சிறையில் வந்துசந்தித்து 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க இயலும் என்பதைத் தெரிவித்தார்கள்.

அவர்களிடம் 5 தொகுதியாவது வேண்டும் என்று கோரினேன். அவர்கள் சிறையிலிருந்து சென்ற பின்னர், அன்று இரவு அவைத்தலைவர் எல்.கணேசன், திமுக தலைவர் கருணாநிதியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், 4 தொகுதிகளேமதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

அவைத் தலைவர் எல்.கணேசன், தேர்தல் குழுவைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களை ஆலோசிக்காமல் ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டுள்ளார். இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அடுத்த நாள் பொடா கோர்ட்டுக்கு அவர் வந்தபோது கடுமையாக கோபித்துக் கொண்டடேன். அதற்கு கணேசன், கூட்டணியைக்காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கையெழுத்திட்டேன், வேறு உள்நோக்கம் ஏதும் இல்லை என்றார்.

நானும் அதை அத்துடன் விட்டுவிட்டேன்.

எனவே மதிமுக தொண்டர்களும், பிரமுகர்களும் எந்தவித மன மாச்சரியங்களும் இன்றி 40 தொகுதிகளிலும் ஜனநாயகமுற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+