சட்டசபையில் அனல் கிளப்பிய காவிரி பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று காவிரி நீர்ப் பிரச்சனை தொடர்பாக நிதியமைச்சர் பொன்னையனுக்கும், எதிர்க்கட்சிஉறுப்பினர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டசபை உறுப்பினர் பழனிச்சாமி, காவிரி நீர்ப் பிரச்சினையில் முதல்வர்ஜெயலலிதா உரிய ஆர்வம் காட்டவில்லை. காவிரி நடுவர் மன்றக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் பொன்னையன், தமிழக அரசு ஒரு போதும் காவிரி நடுவர் மன்றக் கூட்டத்தைப்புறக்கணத்ததில்லை. அக்டோபர் 2001ல் நடைபெற்ற கூட்டத்தில் நானும், அப்போதைய முதல்வர்பன்னீர்செல்வமும் பங்கேற்றோம். ஆகஸ்டு 2002ல் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார்.

தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகஅரசு அதை ஏற்காமல், காவிரி நடுவர் மன்றத்தைக் கூட்டக் கோரியது. அவ்வாறு கூட்டம் 08-09-2002ம் தேதிகூட்டப்படுவதாக செய்தி தமிழக அரசுக்கு 7ம் தேதி அன்றுதான் கிடைத்தது.

இருப்பினும், ஜெயலலிதா அக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசின் நிலையைத் தெளிவாக்குமாறுஎன்னைப் பணித்தார். எனவே, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.

காங்கிரஸ் தலைவர்களாக இருந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தமிழக நலனில் அக்கறைஉள்ளவர்களாக இருந்தார்கள்.

அதேபோல் அக்கறை இருப்பவராக இருந்திருந்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முதல்வரானகிருஷ்ணாவிடம் காவிரி நீர் திறந்து விடச் சொல்லி வற்புறுத்தயிருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், கடந்த 2 ஆண்டுகளாகதமிழக அரசின் தவறான அணுகுமுறைகளினால்தான் காவிரி நீர் கிடைக்காமல் போனது. முன்னாள் முதல்வர்எம்ஜிஆர் பெங்களூர் சென்று அப்போதைய கர்நாடக முதல்வர் குண்டுராவைச் சந்தித்து காவிரி நீரைத் திறந்துவிடக் கோரினார்.

அதுபோன்ற முயற்சியை ஜெயலலிதா மேற்கொள்ளாதது ஏன்? தவிர, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர்பிரதமர்களாக இருந்ததால், கர்நாடகத்தை இது தொடர்பாக வற்புறுத்த முடிந்தது என்றார்.

அப்போது குறுக்கிட்ட பொன்னையன், பிரதமராக இல்லாமல் வெறும் கட்சித் தலைவராக இருப்பதால்தான்தற்போதைய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா சோனியா காந்தியின் பேச்சை மதிக்கவில்லையா? அத்தகைய போக்குசோனியா காந்தியின் பலவீனமான தலைமையையே எடுத்துக் காட்டுகிறது என்றார்.

அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து பேசியமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஹேமச்சந்திரன், கிருஷ்ணா நதி நீர் விஷயத்தில் தமிழக மக்களுக்குத்துரோகம் இழைத்து விட்டதாக ஒரு முறை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் குற்றம் சாட்டினார்.

பின்னர் அவரே ஹைதராபாத் செல்லும்போது, கண்டலேறு நீர் தொடர்பாக சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப்பேசினார். அதேபோல் ஏன் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசக்கூடாது என்று வினவினார்.

அதற்கு பொன்னையன், நாயுடுவையும், கிருஷ்ணாவையும் ஒப்பிட்டுப் பேசுவது தவறு. உச்ச நீதிமன்றம், காவிரிநடுவர் மன்றம் என எதையும் மதிக்காதவர் கிருஷ்ணா. அவருடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்.கர்நாடகத்துடன் பேச்சு நடத்தவே முடியாது, இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தான் தீர்வு காண முடியும்என்றார்.

திமுக உறுப்பினர் துரைமுருகன் பேசுகையில், ஆளுநர் உரையில் காவிரிப் பிரச்சனை குறித்து எதுவுமே இந்த அரசுகுறிப்பிடவில்லை. அவ்வளவு தான் இந்தப் பிரச்சனைக்கு அரசு முக்கியத்தும் தருகிறதா? என்றார்.

இந்த விவாதத்துக்கு நாளை முதல்வர் ஜெயலலிதா பதில் தருவார். அத்துடன் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர்நிறைவு பெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+