முடிவுக்கு வராத அதிமுக-பாஜக சீட் பேரம்: உனக்கு 6 எனக்கு 34 என்பதால் பிரச்சனை
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு 12 சீட்கள் ஒதுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சி அதிமுகவிடம்கோரியுள்ளது. ஆனால் 6 சீட்கள் மட்டுமே தர முடியும் என்று அதிமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டதால்பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை.
அதிமுக தேர்தல் குழுவுடன், பாஜக தேர்தல் குழுவினர் நேற்று மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது அதிமுக சார்பில் பொன்னையன்,ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்டோரும், பாஜக சார்பில் ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சுகுமாறன்நம்பியார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின்போது தாங்கள் 12 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக பா.ஜ.க தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவ்வளவு தர முடியாது 6 சீட்கள்மட்டுமே உங்களுக்கு ஒதுக்க முடியும் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேசிய கட்சியான காங்கிரஸுக்கு திமுக கூட்டணியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், தற்போது மத்தியில்ஆட்சியில் உள்ள எங்களுக்கு அவர்களை விட கூடுதலாக ஒரு இடமாவது ஒதுக்க வேண்டாமா என்று பா.ஜ.க.தலைவர்கள் கேட்டுள்ளனர்.
இருப்பினும் அதிமுக தரப்பு 6 என்ற நிலையிலிருந்து இறங்கி வரவே இல்லை. இதனால் முடிவு எதுவும் தெரியாதநிலையில் பேச்சுவார்த்தை முடிவடைந்தது. மீண்டும் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் முடிவுசெய்துள்ளன.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியே வந்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம பேசுகையில், முடிவு தெரியும்நிலையை நோக்கி பேச்சுவார்த்தை சென்று கொண்டுள்ளது. மீண்டும் ஒருமுறை பேசவுள்ளோம். இன்னும்இரண்டொரு நாட்களில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம் என்பதை உங்களுக்குத்தெரிவிப்போம் என்றார்.
பா.ஜ.கவுக்கு அதிகபட்சம் 7 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கப்படாது என்றும், திருநாவுக்கரசரின் புதுக்கோட்டைதொகுதியும் தரப்படாது என்றும் அதிமுக தரப்பில் உறுதியாக சொல்லப்படுகிறது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications