விருதுநகர் திமுக மாநாட்டுக்கு ரூ. 1.20 கோடி செலவு!
விருதுநகர்:
விருதுநகரில் வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தென் மண்டல மாநாட்டிற்காக ரூ. 1.20கோடி செலவிடப்படவுள்ளதாக மாநாட்டு அமைப்பாளரும், மாவட்டச் செயலாளருமானகே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 150 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாடு நடைபெறவுள்ளது. இதில்75 ஏக்கர் பரப்பளவுக்கு பந்தல் அமைக்கப்பட உள்ளது. மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு மிகக் குறைந்தவிலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்.
கருணாநிதியின் அறிவுரைப்படி மாநாடு தொடர்பான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மாநாட்டு செலவுக்காக ரூ. 1.20 கோடி சேகரிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 21ம் தேதி காலை ரயில் மூலம் விருதுநகர் வருகிறார் கருணாநிதி. அவருக்கு ரயில் நிலையத்தில்பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படும். காலை 9 மணிக்கு கட்சிக் கொடியை ஏற்றி மாநாட்டைத் தொடங்கிவைக்கிறார் கருணாநிதி என்றார் ராமச்சந்திரன்.
இந்த மாநாட்டிற்கு சுமார் 8 லட்சம் திமுக தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில்மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.
வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது:
இதற்கிடையே தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளவர்களிடம் நேர்காணலைத்தொடங்கியுள்ளார் கருணாநிதி.
கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன்உள்ளிட்டோர் இந்த நேர்காணலை நடத்துகின்றனர். தயாநிதி மாறன் தவிர்க்கப்படுகிறார்.
தொகுதியில் வேட்பாளரின் செல்வாக்கு, தேர்தலுக்காக எவ்வளவு செலவு செய்ய முடியும், பலம், பலவீனம் எனபல விஷயங்கள் குறித்து விண்ணப்பதாரர்களிடம் கேட்கப்படுகிறது.
நேற்று திருச்செந்தூர், ராமநாதபுரம், கரூர் ஆகிய தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்தது. திருச்செந்தூரில்போட்டியிட எண்கெளன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகாவும்விண்ணப்பித்துள்ளார். அவரிடமும் நேர்காணல் நடந்தது.
இன்று திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, திருப்பதூர் ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications