நக்கீரன் கோபால் மனு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
பொடா சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் ஆயுதம் வைத்திருப்பது குற்றமாகும்என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக நக்கீரன் கோபால் தாக்கல் செய்திருந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக கோபாலை பொடா சட்டத்தின்கீழ் தமிழக அரசு கைது செய்தது.253 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் கடந்த டிசம்பர் 20ம் தேதி கோபால் ஜாமீனில் வெளிவந்தார்.
இந் நிலையில், தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் ஆயுதம் வைத்திருப்பது பொடா சட்டபடி குற்றமாகும் என்றுதமிழக அரசு 2002, டிசம்பர் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோபால் மனுத் தாக்கல்செய்தார்.
தனது மனுவில், ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதையும் இச் சட்டப் பிரிவின் கீழ் கொண்டு வருவது கொண்டுவந்தது பொடா சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு எதிராகும். உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில்,ஆயுதம் வைத்திருப்பதை குற்றம் என அறிவித்தபிறகு அதை அவ்வப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டும்என்று கூறியிருந்தது. ஆனால், அதை தமிழக அரசு செய்யவில்லை.
மேலும் தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டமோ, தீவிரவாத செயல்களோ இல்லாத நிலையில் பொடா சட்டத்தின்4வது பிரிவின் கீழ் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் ஒரு தடையுத்தரவைப் பிறப்பித்தது தவறு. எனவே, அரசுவெளியிட்ட உத்தரவை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று நீதிபதி ராஜேந்திரபாபு மற்றும் நீதிபதி மாத்தூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.அப்போது கோபாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா ஆஜராகி வாதாடினார்.
இது தொடர்பாக தனது பதிலை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications