சேலத்தில் பா.ம.க-வீர வன்னியர் பேரவை கடும் மோதல்
சேலம்:
ராமதாசுக்கு எதிராக செயல்பட்டு வரும் வன்னிய அமைப்பான வீர வன்னியர் பேரவைக்கும் பாட்டாளி மக்கள்கட்சித் தொண்டர்களுக்க்கும் இடையே சேலம் நகரில் மோதல் மூண்டது. இதையடுத்து 5 பா.ம.கவினரைபோலீஸார் கைது செய்தனர்.
வன்னியர்களின் ஏகோபித்த தலைவர் என்று டாக்டர் ராமதாஸ் தன்னைக் தானே கூறிக் கொள்ளக் கூடாது என்றுகூறி வருபவர் வீர வன்னியர் பேரவையின் தலைவர் டாக்டர் ஜெகத்ரட்சகன். ராமதாஸுக்கு எதிராக தீவிர அரசியல்செய்து வருகிறார்.
அவரது தீவிர முயற்சிகளின் பலனாக ஏராளமான வன்னியர்கள் வீர வன்னியர் பேரவையில் சேர்ந்து வருகிறார்கள்.ஆர்.எம். வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகத்தில் உள்ள ஜெகத்ரட்கன் கடந்த முறை திமுக கூட்டணியில் உதயசூரியன்சின்னத்தில் போட்டியிட்டு எம்.பியானார்.
இந்த முறை அவருக்கு திமுக கூட்டணியில் இடம் கிடைக்காமல் செய்துவிட்டார் ராமதாஸ். இதனால்ஜெகத்ரட்சகனை அதிமுக கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடந்து வருகிறது. இந் நிலையில் பா.ம.க- வீர வன்னியர்அமைப்பு இடையே மோதல் வெடித்துள்ளது.
சேலம் நகரில் தனது பேரவையின் முழு பலத்தையும் காட்டும் வகையில் வரும் 15ம் தேதி பிரமாண்டமான மாநாடுநடத்த ஜெகத்ரட்சகன் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான பேனர்கள், கட் அவுட்கள் நகரின் பல பகுதிகளில்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாமக வன்னியர் சங்கத் தலைவரும், எம்.எல்.ஏவுமான காடுவெட்டி குரு சேலத்திற்கு வந்தார்.அங்கு நடைபெறவுள்ள வன்னியர் சங்க அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே அவர் வந்துள்ளதாககூறப்படுகிறது.
இந் நிலையில் ஐந்து சாலை, சூரமங்கலம், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் வீர வன்னியர் பேரவையின் பேனர்கள்,கட் அவுட்கள், தட்டிகள் ஆகியவற்றை பாமகவினர் எடுத்துச் சென்றனர். இதையடுத்து பாமகவினர் சிலரை வீரவன்னியர் பேரவை நிர்வாகிகள் கையும், களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் தங்களது பேனர்களை பாமகவினர் அகற்றி விட்டதாகவும், அதைத் தட்டிக் கேட்ட தங்களதுதொண்டர்களை தாக்கியதாகவும் பள்ளப்பட்டி போலீஸில் வீர வன்னியர் பேரவை சார்பில் புகாரும் தரப்பட்டது.
இதையடுத்து பாமகவினர், வீர வன்னியர் பேரவையைச் சேர்ந்த சிலரைத் தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த வீர வன்னியர் பேரவையைச் சேர்ந்தவர்கள், எம்.எல்.ஏ. குரு தங்கியிருந்த விருந்தினர்விடுதிக்குத் திரண்டு சென்று அவரை வெளியே வருமாறு கூறி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து பேரவையைச்சேர்ந்தவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 5 பாமக நிர்வாகிகளை போலீஸார் தற்போது கைதுசெய்துள்ளனர்.
இருப்பினும் இரு தரப்பினரும் எந்த நேரத்திலும் மோதலில் ஈடுபடலாம் என்பதால் சேலத்தில் பதற்றம் நிலவுகிறது.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications