சொத்து குவிப்பு: ஜெ. மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை கர்நாடகத்திலிருந்து வேறுமாநிலத்துக்கு மாற்றக் கோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்றுஒத்தி வைத்தது.

தமிழகத்தில் இந்த வழக்கு விசாரணை நியாயமாக நடக்கவில்லை என்று கூறி திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் தாக்கல் செய்த மனு காரணமாக, வழக்கை உச்ச நீதிமன்றம் கர்நாடகத்துக்கு மாற்றியது.

காவிரி நீர்ப் பிரச்சனை, வீரப்பன் விவகாரம் காரணமாக கர்நாடகத்துக்கும், தமிழகத்திற்கும் இடையே உறவுசரியில்லை என்பதால் அங்கு எனது வழக்கை நடத்தினால் தனக்கு நியாயம் கிடைக்காது, பாதுகாப்பு இருக்காதுஎன்று கூறி வழக்கை பாண்டிச்சேரி, ஆந்திரா அல்லது கேரளாவுக்கு மாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இதற்கு கர்நாடகம் தாக்கல் செய்த பதில் மனுவில், விசாரணை நியாயமாக நடக்கும் என்று உத்தரவாதம் அளித்தது.எனினும், காவிரிப் பிரச்சனை தொடர்பாக கர்நாடகத்தில் அவ்வப்போது பிரச்னை ஏற்படும் என்றும், குறிப்பாகஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பிரச்சனை அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது.

இதையடுத்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் என்னகூறியிருந்தேனோ அதையேதான் கர்நாடக அரசும் கூறியுள்ளது. எனவே என் பாதுகாப்பு மட்டுமன்றி, சாட்சிசொல்ல வருபவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதைத்தவிர வேறு வழியில்லை என்று கூறியிருந்தார்.

நீதிபதிகள் வரியவா, சேமா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதுஜெயலலிதாவின் சார்பில் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலும், கர்நாடக அரசின் சார்பில் அம்மாநிலஅட்வகேட் ஜெனரல் ஜெயராமும், அன்பழகனின் சார்பில் வக்கறிஞர் அந்தியர்ஜூனாவும் வாதாடினர்.

கர்நாடகத்துடனான தமிழகத்தின் மோதல் காரணமாக வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றினால் தான் நியாயமானவிசாரணை நடக்கும் என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆனால், கர்நாடகத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்றார் அம் மாநில அட்வகேட்ஜெனரல்.

வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற எதிர்ப்புத் தெரிவித்தார் அந்தியர்ஜூனா.

இந்த மூவரின் வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.

கர்நாடகத்தில் தனக்கு பாதுகாப்பு இருக்காது என்று கூறும் ஜெயலலிதா, தனது தோழி சசிகலா சகிதம் மைசூர்சாமுண்டீஸ்ரி மலைக்கு சாமி கும்பிட பல முறை வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+