மாவட்ட ஆட்சியர்களுடன் டாண்டன் இன்று ஆலோசனை
சென்னை:
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட ஆட்சியர்கள்) மத்திய தேர்தல் ஆணையர் டாண்டன் இன்றுஆலோசனை நடத்துகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று சென்னையில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன்ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அப்போது தமிழகம் முழுமைக்கும் ஒரேநாளில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு அனைத்துக் கட்சியினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இந் நிலையில், 30 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் டாண்டன் இன்று ஆலோசனை நடத்தினார். இன்றையஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கியும் கலந்து கொண்டார்.அப்போது தமிழகத்தில் தேர்தலை நேர்மையாக நடத்த சட்டத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும்,தேர்தலின்போது அரசியல் கட்சிகள் பின்பற்றப்பட வேண்டிய நடத்தை விதிமுறைகள் குறித்தும் முக்கியமாகவிவாதிக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், தேர்தல்செலவீனங்களை வீடியோ ஆதாரத்துடன் தாக்கல் செய்யுமாறும் டாண்டன் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே மத்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் அதிகாரி ஏ.என்.ஷா நிருபர்களுக்குப்பேட்டியளிக்கும்போது, கல்வி நிறுவனங்களின் தேர்வு தேதிகளைப் பொறுத்தே, நாடாளுமன்ற தேர்தல் தேதிகளைமுடிவு செய்ய இயலும்.
கடைசியாக ஏப்ரல் 16ம் தேதி தமிழ்நாட்டிலும், ஏப்ரல் 17ம் தேதி ஒரிசாவிலும் தேர்வுகள் முடிவடைகின்றன.அதனையடுத்து தேர்தலை எப்போது நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றார்.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு
கடந்த டிசம்பர் மாதம் புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி திருத்தபட்டவாக்காளர் பட்டியல் இன்று மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications