டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இடம் மறுக்கப்படும் மத்திய அமைச்சர்கள்டெல்லி:டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மத்திய அமைச்சர்களுக்கு அறைகளை ஒதுக்காமல் தமிழக அரசு முரண்டு பிடித்து வருகிறது.திமுக, காங்கிரஸ், பா.ம.கவைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். வழக்கமாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு டெல்லியில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு அறைகள் ஒதுக்கப்படும். அதில் அமைச்சர்களின் அலுவலகங்கள் இயங்கும். தமிழ்நாடு இல்லத்தில் 10 சிறப்பு அறைகள் உள்ளன. இதில் எந்த அறையும் மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இது தவிர புதிய கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதைத் திறந்தால், அமைச்சர்களுக்கு ஒதுக்க வேண்டியிருக்கும் என்பதால் அதையும் தமிழக அரசு திறக்காமல் இருப்பதாகத் தெரிகிறது. அறைகளைக் கேட்டு அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைக்கும் இதுவரை பதில் தரப்படவில்லை என்று தெரிகிறது. இந்த அறைகள் தமிழகத்தில் இருந்து வரும் நீதிபதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களது பெயர்களில் தமிழக அரசே அறைகளை வேண்டுமென்றை பிளாக் செய்து பூட்டி வைத்திருப்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.
டெல்லி:
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மத்திய அமைச்சர்களுக்கு அறைகளை ஒதுக்காமல் தமிழக அரசு முரண்டு பிடித்து வருகிறது.
திமுக, காங்கிரஸ், பா.ம.கவைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.
வழக்கமாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு டெல்லியில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு அறைகள் ஒதுக்கப்படும். அதில் அமைச்சர்களின் அலுவலகங்கள் இயங்கும்.
தமிழ்நாடு இல்லத்தில் 10 சிறப்பு அறைகள் உள்ளன. இதில் எந்த அறையும் மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இது தவிர புதிய கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதைத் திறந்தால், அமைச்சர்களுக்கு ஒதுக்க வேண்டியிருக்கும் என்பதால் அதையும் தமிழக அரசு திறக்காமல் இருப்பதாகத் தெரிகிறது.
அறைகளைக் கேட்டு அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைக்கும் இதுவரை பதில் தரப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த அறைகள் தமிழகத்தில் இருந்து வரும் நீதிபதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களது பெயர்களில் தமிழக அரசே அறைகளை வேண்டுமென்றை பிளாக் செய்து பூட்டி வைத்திருப்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications