மேட்டூரில் மத்தியக் குழு ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

3 பேர் அடங்கிய மத்திய நிபுணர் குழு இன்று மேட்டூர் அணையைப் பார்வையிட்டது.

காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தமிழக எம்.பிக்களின் கோரிக்கையையடுத்து பிரதமர்மன்மோகன் சிங் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.

இதில் நீர்வளக் கமிஷன் உறுப்பினர் வஷிஷ்டா, மத்திய நீர்வளத்துறை அமைச்சக அதிகாரி பரத்வாஜ், மத்தியவேளாண்மைத்துறை அதிகாரி ஜோகிந்தர் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் நேற்று கர்நாடகம் சென்றனர். அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட காவிரிப் படுகையில்உள்ள அணைகளைப் பார்வையிட்ட அவர்கள் அங்குள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணராஜ சாகர் அணையில் கர்நாடக அதிகாரிகளுடன் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனைநடத்தினர். பின்னர் மாண்டியா மாவட்டத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளையும் பார்வையிட்டு விவசாயிகளுடன்பேசினர்.

இதைத் தொடர்ந்து இன்று கர்நாடக முதல்வர் தரம்சிங்கை பெங்களூரில் சந்தித்துப் பேசிய அந்தக் குழு பிற்பகலில்மேட்டூர் வந்தது. அங்கு ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நீரின் இருப்பை இக் குழு பார்வையிட்டது.

தமிழக பொதுப்பணித்துறைச் செயலாளர் பழனியப்பன், காவிரி தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் மோகன்கிருஷ்ணன், வேளாண்மைத்துறைச் செயலாளர் கண்ணன், சிறப்பு ஆணையர் கவுரி சங்கர், தஞ்சை நீர் மேலாண்மைஆராய்ச்சி நிலைய அதிகாரிகள், திருச்சி மண்டலப் பொறியாளர் மீனாட்சி சுந்தரம், சேலம் கலெக்டர் சுகுமாறன்உள்ளிட்டோர் இவர்களுக்கு தமிழக காவிரிப் பாசன நிலையை விளக்கினர்.

தற்போது மேட்டூர் அணையில் 38.50 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தக் கொள்ளளவு 120 அடியாகும்.டி.எம்.சி கணக்கில் தற்போது 11.28 டிஎம்சி தண்ணீர் உள்ளது, மொத்தம் 93.50 டிஎம்சி நீரை இங்கு தேக்கி வைக்கமுடியும். அணைக்கு விநாடிக்கு 1816 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

கடந்த ஆண்டில் கர்நாடகம் 65.138 டிஎம்சி நீரை விடுவித்துள்ளது. ஆனால் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி இந்தக் கால கட்டத்தில் 205 டிஎம்சி நீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். 139 டிஎம்சி நீரை கர்நாடகம்விடுவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தக் குழுவினர் சத்தியமங்கலம் காட்டுப் பகுதி வழியாக மேட்டூரை அடைந்தது. இப் பகுதி வீரப்பன்நடமாட்டம் மிக்கது என்பதால் அங்கு அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பு போடப்பட்டது. இந்தக் குழுவினர்பன்னாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடும் நடத்தினர்.

இன்றிரவு மேட்டூரிலேயே தங்கியிருக்கும் இந்தக் குழு நாளை பெங்களூர் வழியாக டெல்லி திரும்பி பிரதமர்மன்மோகன் சிங்கிடம் தனது அறிக்கையை வழங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+