மன்மோகன், சோனியாவுக்கு கருணாநிதி நன்றி !
சென்னை:
கர்நாடகத்திலிருந்து காவிரி நீரைத் திறந்து விட உதவி செய்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
கபினி அணையிலிருந்து தண்ணீர் தமிழகத்துக்கு வந்து கொண்டுள்ள நிலையில் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
எனது கோரிக்கையை ஏற்று கர்நாடக முதல்வருடன் பேசி கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு, தங்களது தக்க சமயத்திலான உதவியினால் பெரும் பலன் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
ராமதாஸ் வெற்றி அறிக்கை:
காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங்கின் உத்தரவையடுத்து தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் முன் வந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக நிலவிய கடுமையான நிலை மாறி, சுமூக நிலை உருவாகியுள்ளது.
காவிரியில் தண்ணீர் பெறும் முயற்சியில் மாநில அரசுக்குள்ள பொறுப்பை முதல்வர் ஜெயலலிதா தட்டிக் கழித்த நிலையில், ஜ.மு.கூட்டணியின் தலைவரான கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
காரசாரக் கடிதங்கள், வழக்குகள், பரபரப்பான புகார்கள் என்று பலன் தராத ஜெயலலிதாவின் கடந்த கால செயல்களுக்கு மாறாக சமூகமான சூழ்நிலையில் விவாதித்தன் பலனாகத் தான் தண்ணீர் கிடைத்துள்ளது.
மூன்று ஆண்டுகளாக ஜெயலலிதா அரசு சாதிக்காததை 3 வாரத்தில் எங்கள் கூட்டணி சாதித்துக் காட்டியுள்ளது.
கபினி அணை நிரம்பி வழிவதால் மட்டும் நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது என்பதல்ல. பிரதமரின் அறிவுறுத்தலால் இதர அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடும் என்ற நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
வீரமணி பாராட்டு:
இது குறித்து திக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான கூட்டணி, முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆகியவை காவிரிப் பிரச்சனையில் இணைந்து எடுத்த முயற்சிகள் நல்ல பலனைத் தந்துள்ளன. இதற்காக அனைவரையும் பாராட்டுகிறேன்.
கர்நாடக அரசை வலியுறுத்தி நீர் தரச் சொன்ன பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications