படுக்கையில் கிடக்கும் பெண்ணிடம் 50 பவுன் கொள்ளை
சென்னை:
சாலை விபத்தில் படுகாயமடைந்து படுத்த படுக்கையாய் இருக்கும் பெண்ணிடம், கத்தி முனையில் சிலர் 50 பவுன் நகை மற்றும் ரூ. 10,000 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சத்யலட்சுமி. இவர் சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி முதுகெலும்பில் அடிபட்டு படுத்த படுக்கையாய் இருக்கிறார். இவருக்கு உதவியாக ஜரீனா என்ற பெண்மணி உடன் உள்ளார்.
நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு 3 பேர் இவரது வீட்டுக்கு வந்துள்ளனர். கூரியர் நிறுவனத்திலிருந்து வருவதாக அவர்கள் கூறவே, ஜரீனா கதவைத் திறந்துள்ளார். கதவை திறந்தவுடன், ஜரீனாவைத் தாக்கிய 3 பேரும் வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்தனர்.
சத்யலட்சுமி இருந்த அறைக்குள் நுழைந்த அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் உள்ள 200 பவுன் நகையையும், ரூ. 20 லட்சம் பணத்தையும் கொடுத்து விடுமாறு மிரட்டியுள்ளனர்.
அதிர்ந்து போன சத்யலட்சுமி, தன்னிடம் இருந்த சாவியை அவர்களிடம் கொடுத்து, பீரோவில் உள்ள நகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்னை விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார்.
பின்னர் 3 பேரும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைப் பெட்டியை எடுத்து அதில் இருந்த எல்லா நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர். பீரோவில் மொத்தம் 50 பவுன் நகையும் ரூ. 10,000மும் இருந்துள்ளது.
தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். படுத்த படுக்கையாய் இருக்கும் பெண்ணிடம் துணிகர கொள்ளை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில்தான் திருவல்லிக்கேணி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது. இப்போது இந்தக் கொள்ளை நடந்திருப்பது சென்னை மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications