திரையுலகினர் ஒன்றுபட டி.ஆர். அழைப்பு
சென்னை:
நடிகர்களுக்குப் பிரச்சினை என்றால் திரையுலகினர் ஒன்று சேர வேண்டும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் பேசுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ரஜினிகாந்தில் தொடங்கி விஜயகாந்த் வரை இந்தப் பிரச்சனை தொடர்கிறது. அரசியல் ரீதியாக பாமக நிறுவனர் ராமதாஸூடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. இந்தப் பிரச்னையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
பாமகவினரால் நடிகர்களுக்குத் தொடர்ச்சியாக பிரச்சனைகள் வருகிறது என்றால் திரையுலகினர் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும். ஆனால் ரஜினிக்குப் பிரச்சனை ஏற்பட்டபோது யாரும் குரல் கொடுக்கவில்லை.
லட்சிய திமுகவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிக்காக வரும் 25ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்லவிருக்கிறேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து வரும் 28ம் தேதி காலை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த உள்ளோம். செப்டம்பர் 1ம் தேதி கட்சி அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது.
கட்சியில் எவ்வளவு பேர் சேர்கிறார்கள் என்பது முக்கியமல்ல. யார் யார் சேர்கிறார்கள் என்பதே முக்கியம். 5 லட்சம் பேரை கணக்கில் கொண்டு 10 லட்சம் பேர் வரை சேர்ப்போம்.
அரசியல் அற்ற அரசியல் என்ற நிலையில் மக்கள் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பேன். எதிர்க்கட்சித் தலைவர் என்று பெய-ரை விட- எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களில் முதல் ஆள் என்றாலே போதும் என்று கூறினார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications