போலீசாரால் தாக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்
சென்னை:
சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது போலீஸார்காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவி வெண்மதிக்கு கவலைக்கிடமான நிலையில்உள்ளார்.
வெண்மதியை ஆண் போலீசாரும் பெண் போலீசாரும் பூட்ஸ் கால்களால் மிதித்தனர். இதில் அவருக்கு வயிற்றின்உள்பக்கத்தில் படு காயம் ஏற்பட்டு ரத்தப் போக்கு ஏற்பட்டது. இப்போது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ள அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
தமிழக அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்தும், கல்வியை வியாபாரமாக்குவதை எதிர்த்தும் இந்திய மாணவர்சங்கத்தைச் சேர்ந்த சுமார் 20 மாணவ, மாணவியர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்விஇயக்குநரகம் முன் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க அவர்கள் முயன்றபோது போலீஸார் அவர்களைத் தடுத்து மிகக் கடுமையாகதாக்கினர். இதில் 2 மாணவிகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் வெண்மதி என்ற மாணவிக்கு ரத்தப் போக்குஏற்பட்டுள்ளது. அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து அவர் மயிலாப்பூரில் உள்ளதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீஸார் மிருகத்தனமாக வெண்மதியின் அடிவயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்ததால்தான் அவரது நிலைமோசமடைந்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்:
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை பாரிமுனையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதேபோல, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போராட்டம் காரணமாக இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கல்லூரிகள் விடுமுறைவிடப்பட்டிருந்தன.
காவலர்கள் இடமாற்றம்:
இதற்கிடையே மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் ஆகியோர் இடமாற்றம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.மேலும் சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய சென்னை காவல்துறை இணை ஆணையர்சுனில்குமாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications