நாடு முழுவதும் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்தன
டெல்லி & சென்னை:
ஊதிய உயர்வு கோரி பொதுத் துறை வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் ஒரு நாள் அடையாளவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்துப் போயின. அதே நேரத்தில் பொதுத் துறை வங்கிகளின்ஏ.டி.எம்கள் வழக்கம்போல் செயல்பட்டன.
தமிழகத்தில் பல்வேறு வங்கிகளின் சுமார் 4,100 கிளைகள் மூடப்பட்டதால் வங்கிப் பணிகள் கடுமையாகபாதிக்கப்பட்டன.
ஊதிய உயர்வு மற்றும் சில சலுகைகள் கோரி 9 முக்கிய சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும் அதிகாரிகளும் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத் துறை வங்கிகள் தவிர சில தனியார் வங்கி ஊழியர்களும் இதில்பங்கேற்றனர்.
இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக, சங் பரிவார் அமைப்புகளில் பதிவு செய்யப்பட்ட வங்கி ஊழியர் சங்கங்களும்இதில் அடக்கம்.
ஆனால், எச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ, யுடிஐ, இன்டஸ்இன்ட் ஆகிய இந்திய தனியார் வங்கிகளும், எச்.எஸ்.பி.சி,ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆகிய வெளிநாட்டு வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட்டன.
தங்களது கோரிக்கைகளை உடனே மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், நாளை மும்பையில் கூடும் சங்கங்களின்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும், செப்டம்பர் மாதம் தொடர்ந்து இருநாட்கள் வேலை நிறுத்தத்தில் குதிப்போம் என்றும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இன்றைய போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications