ஜெயலட்சுமி- போலீஸ் உறவு: விசாரணைக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmiஜெயலட்சுமியுடன் செக்ஸ் மற்றும் பிற தொடர்புகள் வைத்திருந்த போலீஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தகாவல்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே இவரோடு உறவு வைத்திருந்த மதுரை திடீர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்சர் இளங்கோவன்,நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டையா கண்ணன் ஆகியோர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுவிட்டனர்.

இந் நிலையில் தன்னுடன் தொடர்பு வைத்திருந்ததாக 30 அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார்ஜெயலட்சுமி.

இதில் நேற்று 19 பெயர்களே நமக்குக் கிடைத்தன. இப்போது மேலும் 3 பெயர்கள் வெளியில் வந்துள்ளன.அவர்களது விவரம்:

20. சாமியப்பன் (இன்ஸ்பெக்டர் இளங்ககோவனின் ரைட்டர்)

21. போலீஸ்காரர் மந்தரம்

22. போலீஸ்காரர் ஆறுமுகம் (இந்த இருவரும் ஜெயலட்சுமியை டிஎஸ்பி ராஜசேகர் கல்யாணம் செய்தபோதுஉடனிருந்தவர்கள்)

இவர்களைத் தவிர அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் உதவியாளர் ஒருவரும் தன்னுடன் தொடர்பு வைத்திருந்ததாகஜெயலட்சுமி பட்டியலில் கூறியிருக்கிறார்.

Jayalakshmiஇதையடுத்து போலீசார்-ஜெயலட்சுமி உறவு குறித்து துறைரீதியிலான விசாரணை நடத்தி இந்தக் குற்றச்சாட்டுகள்உண்மையெனில், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணை ஒரு பக்கம் நடந்தாலும், துறைரீதியிலாக விசாரிக்குமாறு தென் மண்டல ஐஜி ராஜேந்திரனுக்குகாவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில் உளவுப் பிரிவு போலீசாரை ராஜேந்திரன்இறக்கிவிட்டுளளார்.

தகவல்கள் திரட்டப்பட்ட பின் அதனை அறிக்கையாக அவர் காவல்துறை தலைமையிடம் ஒப்படைப்பார் என்றுதெரிகிறது. காவல்துறையில் இருப்பவர்கள் பிற தொழில்களில் ஈடுபடக் கூடாது, செக்ஸ் குற்றச்சாட்டுகளுக்குஆளாகக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன.

ஆனால், இப்போது மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் தொழிலில் ஈடுபட்டதோடு, ஜெயலட்சுமி மூலம்கந்துவட்டி, சினிமா பைனான்ஸ் பிசினசும் காவல்துறை திகாரிகள் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அது தவிரஜெயலட்சுமியுடன் தவறான உறவும் வைத்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதியானால் இவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதோடு, பிற தண்டனைகளும்கிடைக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+