டெல்லி ஜெ: தமிழ்நாடு இல்ல கட்டடம் திறப்பு
டெல்லி& சென்னை:
டெல்லியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு இல்லத்தின் புதிய விருந்தினர் மாளிகையை முதல்வர் ஜெயலலிதா இன்றுதிறந்து வைத்தார்.
நேற்றிரவு 8.20 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தோழி சசிகலாவுடன் டெல்லி சென்றஜெயலலிதாவை விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். மத்தியில் காங்கிரஸ்தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.
இப் பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கத் திட்டமிட்டுள்ள ஜெயலலிதா, தமிழக திட்டங்கள்குறித்து விவாதிக்கவுள்ளார்.
இன்று காலை சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்ல வளாகத்தின் அருகே ரூ.27 கோடி செலவில்கட்டப்பட்டுள்ள புதிய தமிழ்நாடு இல்ல விருந்தினர் மாளிகையை ஜெயலலிதா திறந்து வைத்தார். இந் நிகழ்ச்சியில்பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அந்த இல்லத்தை ஜெயலலிதாசுற்றிப் பார்த்தார்.
![]() |
தனது வெளிநாட்டுப் பயணத்துக்கான சில முக்கிய உதவிகளை அவர் மத்திய அரசிடம் கேட்கக் கூடும் என்றுதெரிகிறது. அவர் கேட்கும் அளவுக்கு அன்னியச் செலாவணி ஒதுக்குவதிலும், மூத்த அதிகாரிகள் உள்பட 18பேருக்கு 2 மாத காலத்துக்கு வெளிநாடு செல்ல அனுமதிப்பதிலும் மத்திய அரசு சுணக்கம் காட்டி வருகிறது.
இந்த விஷயத்தை பிரதமருடன் பேசவுள்ளார் ஜெயலலிதா. அதன் பின்னரும் மத்திய அரசு இறங்கி வராவிட்டால்,தனது வெளிநாட்டுப் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு சென்னை போரூரில் உள்ள முக்கியமான தனியார்மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications